Neeya Naana: தங்கை வாழ்க்கைக்காக தியாகம் செய்த அண்ணன் : விவாதிக்க வைத்த நீயா நானா? நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா? நானா?” நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பகல் 12 மணிக்கு இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் கண்கலங்க வைக்கும் அளவுக்கு காட்சிகள் அரங்கேறியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா? நானா?” நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பகல் 12 மணிக்கு இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வார நிகழ்ச்சியின்எபிசோடில் “வசதியான சூழலில் இருக்கும் தங்கை vs பொருளாதார போராட்டத்தில் இருக்கும் அண்ணன்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில் பேசிய ஒரு பெண்,‘ஏற்கனவே எனக்கு கல்யாணத்துக்கு வாங்குன கடன், சீமந்தம், பிள்ளை பேறு, பிறந்தநாள், காதுகுத்து என தொடர்ந்து கடன் வாங்கி செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணனுடைய கல்யாணம் என ஆரம்பித்தால் அதுக்கும் திரும்ப கடன் வாங்கணுமே என்ற ரீதியில் சொல்கிறார்கள். நான் வேண்டாம் என சொன்னாலும் கட்டாயப்படுத்தி செய்கிறார்கள்” என்ற கருத்தை தெரிவித்தார்.
இதைக்கேட்ட கோபிநாத், ‘காசு பணம் இல்லன்னாலும் கௌரவம் முக்கியம்டா. தங்கச்சி வாழ்க்கை என யார் சொல்லக்கூடும் என நினைக்கிறீர்கள்?’ என கேட்க, அப்பெண் அம்மாவாக தான் இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கோபிநாத், ‘செய்ய வேண்டிய சூழல் ஒரு பக்கம், அந்த பக்கம் செய்ய வேண்டும் என சொல்லும் சூழல் மறுபக்கம் என இரண்டையும் எதிர்கொள்பவரிடம் அட்வைஸ் மட்டும் செய்தால் எப்படி?’ என கேட்டார். மேலும், ‘உங்கள் அண்ணனுக்கு கல்யாணம் செய்வதை பற்றி யோசிக்கக்கூடிய சூழல் இருக்கிறதா?, அவர் மேலேயே எல்லாத்தையும் தூக்கி போடுறீங்க. கடன் வாங்குற சூழலில் தான் குடும்பம் வைத்துள்ளது. இதற்கு தீர்வு கொடுக்க வேண்டியது யார்?’ என அப்பெண்ணிடம் கோபிநாத் கேட்டார்.
உடனே குறுக்கிட்ட அப்பெண்ணின் அண்ணன், “நான் தான்” என சொல்ல, கோபிநாத், ‘உன் தியாகத்தில் தீயைத்தான் வைக்க வேண்டும்’ என கூறி அந்த நபரை சற்று கண்டித்தார். மேலும் அந்த அண்ணன், தன் இப்போது வாங்கியுள்ள கடனை அடைக்க இன்னும் 5, 6 ஆண்டுகள் ஆகலாம் என சொல்லும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. மேலும், சமூகத்தின் வரதட்சணை அமைப்பு குறித்து விவாதத்தை கிளப்பியுள்ளது