மேலும் அறிய

Baakiyalakshmi: பாக்கியாவுக்கு ராதிகா வைக்கும் டெஸ்ட்.. அமிர்தா பற்றி தெரிந்து கொண்ட கணேஷ்... பாக்கியலட்சுமியில் இன்று!

Baakiyalakshmi Sep 27: வோட்டிங் மூலம் பாக்கியலட்சுமிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த ராதிகா. அமிர்தா பற்றி தெரிந்து கொள்ளும் கணேஷ். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம்  பாக்கியா “என்ன காரணத்திற்காக எங்களின் கேன்டீன் ஆர்டரை கேன்சல் செய்கிறீர்கள்” எனக் கேட்கிறாள். “உங்களுக்கு கேன்டீன் ஆர்டர் கொடுக்க எங்களுக்கு விருப்பமில்லை, அதனால் தான் கேன்சல் செய்கிறோம்”
என திரும்பத் திரும்ப அதையே சொல்கிறாள். 

“ஒரு முறை உங்களின் ஸ்டாஃப்ஸ் கிட்ட கேளுங்க, எங்க சமையலில் என்ன குறை இருந்ததது?” என பாக்கியா சொல்ல "எங்க ஸ்டாஃப்ஸ் மேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?" என ராதிகா கேட்க "இல்லை என்னோட சமையல் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உள்ளது" என்கிறாள் பாக்கியா. அப்போ வோட்டிங் வைச்சுக்கலாம் என ராதிகா சொல்லிவிட்டு சென்று விடுகிறாள். 

Baakiyalakshmi: பாக்கியாவுக்கு ராதிகா வைக்கும் டெஸ்ட்.. அமிர்தா பற்றி தெரிந்து கொண்ட கணேஷ்... பாக்கியலட்சுமியில் இன்று!

அமிர்தாவுக்கு அவளின் அம்மா போன் செய்து பேசுகிறார். அப்போது எல்லாரையும் பற்றி விசாரித்துவிட்டு கணேஷின் அம்மா, அப்பா பற்றி விசாரிக்கிறார். "அவர்களுக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. கொஞ்ச நாளா தயங்கி தயங்கி தான் பேசுறாங்க. என்னவோ தப்பா இருக்குறது என மட்டும் தெரிகிறது. எழில் கிட்ட கூட சொன்னேன். அவர்களை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாம் என சொல்லியிருக்கிறார்" என்கிறாள் அமிர்தா. 

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமிர்தாவின் அம்மா "நீ ஒன்னும் இங்க எல்லாம் வர வேண்டாம். உன்னுடைய வீட்டில் தப்பா நினைப்பாங்க. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்" என சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார் அமிர்தாவின் அம்மா. “ஏன் அம்மா இப்படி பேசுறாங்க” எனக் குழப்பத்தில் இருக்கிறாள் அமிர்தா. 

Baakiyalakshmi: பாக்கியாவுக்கு ராதிகா வைக்கும் டெஸ்ட்.. அமிர்தா பற்றி தெரிந்து கொண்ட கணேஷ்... பாக்கியலட்சுமியில் இன்று!

பழனிச்சாமி வீட்டுக்கு பாக்கியா வருகிறாள். அப்போது பாக்கியாவின் முகம் வாட்டமாக இருப்பதைப் பார்த்த பழனிச்சாமி  "என்ன பிரச்சினை. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" எனக் கேட்கிறார். அப்போது பாக்கியா கேன்டீன் பிரச்சினை பற்றி சொல்கிறாள். வோட்டிங் வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். “அது தான் என்னுடைய ஒரே நம்பிக்கை” என பாக்கியா சொல்கிறாள். “நீங்க நிச்சயமா ஜெயிப்பீங்க” என பழனிச்சாமி ஊக்கப்படுத்துகிறார். 

வீட்டில் உள்ள அனைவரிடமும் கேன்டீன் பிரச்சினை பற்றி சொல்கிறாள் பாக்கியா. அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கோடீஸ்வரன் சார் கிட்ட சொல்ல வேண்டியது தானே என கேட்கிறார் ராமமூர்த்தி. அவர் ஊரில் இல்லை என்றும் பொறுப்புகள் அனைத்தையும் ராதிகாவின் ஒப்படைத்து சென்றுள்ளது பற்றியும் சொல்கிறாள் பாக்கியா. 

"இப்படி ஒரு மோசமான ஆளை நான் பார்த்ததே இல்லை. நீ கவலைப்படாத அம்மா என நம்பிக்கை கொடுக்கிறான்" எழில். இனியாவும் பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவுக்கு தெம்பு கொடுக்கிறார்கள். 

கணேஷ் வீட்டில் அவனின் அப்பா - அம்மா இருவரும் ரூமில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வீட்டில் உள்ள எல்லா இடத்திலும் அமிர்தா பற்றி ஏதாவது தகவல் தெரிகிறதா எனத் தேடுகிறான் கணேஷ்.

அலமாரியில் எல்லாம் தேடுகிறான். அப்போது அலமாரி மேலே இருந்த பெட்டியை எடுத்து பார்க்கையில் அதில் அமிர்தாவின் போட்டோவை பார்க்கிறான். அமிர்தா அனைவரோடும் நன்றாக தான் இருந்து இருக்கிறாள். அப்போ என்னிடம் இருந்து அமிர்தாவைப் பற்றி எதையோ மறைக்கிறார்கள் எனக் கண்டுபிடித்து விடுகிறான். உள்ளே ஏதோ சத்தம் கேட்டு எழுந்த கணேஷின் அம்மா அப்பா கதவைத் தட்டுகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget