மேலும் அறிய

Baakiyalakshmi: ஜெனிக்கு குழந்தை பிறந்துடுச்சு.. கோபிக்கு தலைகால் புரியல.. பாக்கியலட்சுமியில் இன்று!

Baakiyalakshmi Oct 03: ஜெனி பிரசவ வலியில் துடிப்பதை பார்த்து அவளை விடவும் அதிகமாக அழுகிறான் செழியன். ஜெனிக்கு பெண் குழந்தை பிறந்தது. ராதிகாவை தூண்டிவிடும் அவளின் அம்மா. பாக்கியலட்சுமியில் இன்று...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் ஜெனிக்கு பிரசவ வலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளாள். வலியில் ஜெனி துடிப்பதை பார்த்து அவளை விடவும் அதிகமாக அழுது துடிக்கிறான் செழியன்.

"நீங்க தான் குழந்தை பெத்துக்க பெத்துக்க டார்ச்சர் பண்ணீங்க. இப்ப பாருங்க ஜெனி எப்படி கஷ்டப்படுறானு" என சொல்லி ஈஸ்வரியை திட்டுகிறான். அவனை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். அப்பவும் சமாதானமாகாத செழியன், அங்கு இருந்தால் மேலும் ஜெனியை பயமுறுத்துவான் என சொல்லி அவனை வெளியில் உட்கார வைக்கிறார்கள். மாலினி செழியனுக்கு போன் செய்து கொண்டே இருக்கிறாள். அதை செழியன் கட் செய்து விடுகிறான். 

Baakiyalakshmi: ஜெனிக்கு குழந்தை பிறந்துடுச்சு.. கோபிக்கு தலைகால் புரியல.. பாக்கியலட்சுமியில் இன்று!

வீட்டில் இனியா “நான் ஹாஸ்பிடலுக்கு இப்போவே போகணும், பாப்பா பிறந்து இருக்குமா” என அமிர்தாவையும், ராமமூர்த்தியையும் நச்சரிக்கிறாள். குழந்தை பிறந்தவுடன் போன் பண்ணுவாங்க நாம அதுக்கு அப்புறம் ஹாஸ்பிடல் போகலாம் என சொன்னாலும் இனியா கேட்கவில்லை.

அப்போது கோபி இனியாவுக்கு போன் செய்து அவளுடைய காலேஜ் எப்படி இருந்தது என விசாரிக்கிறார். அப்போது இனியா கோபியிடம் “ஜெனி அக்காவுக்கு வலி வந்துடுச்சு, செழியன் அண்ணனுக்கு இன்னிக்கு பாப்பா பிறந்துவிடும்” என சொல்கிறாள்.

கோபியிடம் இனியா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக சொல்லவும், கோபியும் “சரி நான் வீட்டில் தான் இருக்கிறேன், உன்னை வந்து கூட்டிட்டு போகிறேன்” என சொல்லி இனியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். 

ஹாஸ்பிடலில் செழியன் ஜெனி கதறுவதை கேட்டு துடிக்கிறான். கோபி வந்ததும் என்ன ஆச்சு ஏதாவது பிரச்சினையா என கேட்கிறார். ஜெனி அழுவதை பார்த்து தங்க முடியாமல் அவளுக்கு மேல இவன் தான் கத்தி கூச்சல் போடுறான் என ஈஸ்வரி கோபியிடம் சொல்கிறார்.

செழியன் அழுவதை பார்த்து கோபியும் கண்கலங்குவதை பார்த்து பாக்கியாவும் ஈஸ்வரியும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். பாக்கியாவும் கோபியும் சேர்ந்து செழியனை சமாதானம் செய்வதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். இதை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது என இனியாவிடம் கூறுகிறார்.

Baakiyalakshmi: ஜெனிக்கு குழந்தை பிறந்துடுச்சு.. கோபிக்கு தலைகால் புரியல.. பாக்கியலட்சுமியில் இன்று!

அனைவரும் பதட்டமாக இருக்க ஜெனிக்கு வலி அதிகமாக பிரசவ வார்டுக்கு அழைத்து செல்கிறார்கள். "இனிமே நான்  குழந்தையே பெத்துக்க மாட்டேன்" என்கிறான் செழியன். கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்து “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. ஜெனி நன்றாக இருக்கிறாங்க” என சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். கோபி செழியனை தூக்கி சுத்துகிறார். “நான் போய் ஸ்வீட் வாங்கிட்டு வருகிறேன்” என கோபி செல்கிறார். செழியன் மிகவும் சந்தோஷமாக இருக்கும் அந்த நேரத்தில் கூட மாலினி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்கிறாள். 

அனைவரும் குழந்தையை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். “ஜெனிக்கு குடிக்க நானே ஜூஸ் வாங்கி வருகிறேன் அப்படியே எல்லாருக்கும் டிபன் வாங்கிட்டு வந்துடுறேன்” என சொல்லி செல்கிறார் கோபி. ஹாஸ்பிடலில் உள்ள அனைவருக்கும் சந்தோஷமாக ஸ்வீட் கொடுக்கிறார். அப்போது  ராதிகா போன் செய்யவும் அவளிடம் “ஜெனிக்கு குழந்தை பிறந்தது பற்றி சொல்லி, நான் இன்னிக்கு நாளைக்கு இங்க தான் இருக்க போகிறேன். நான் அப்புறம் போன் செய்யுறேன்” என சொல்லி போனை வைத்து விடுகிறார். 

Baakiyalakshmi: ஜெனிக்கு குழந்தை பிறந்துடுச்சு.. கோபிக்கு தலைகால் புரியல.. பாக்கியலட்சுமியில் இன்று!

ராதிகாவின் அம்மா ராதிகாவை தூண்டி விடுகிறார். “பார்த்துட்டு வர வேண்டியது தானே.. அங்கேயே எதுக்கு இருக்கணும்” என பாக்கியாவுக்கு எதிரா ராதிகாவை தூண்டி விடுகிறார். “நீ போய் குழந்தையை பார்த்துட்டு மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்துடு” என்கிறார். மயூ “நானும் வந்து பாப்பாவை பார்க்கலாமா” எனக் கேட்க, கமலா மயூவை திட்டிவிடுகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget