Baakiyalakshmi: ஏதோ தப்பா இருக்குதே.. பாக்கியாவுக்கு வந்த சந்தேகம்.. அமிர்தாவை பின்தொடரும் கணேஷ்!
Baakiyalakshmi Oct 13: எழில் அமிர்தாவைப் பார்த்து கணேஷ் ஆவேசப்படுவதைப் பார்த்து பதறிப்போன பாக்கியா. நிலாவுடன் கொஞ்சி விளையாடும் கணேஷ்.. இன்றைய பாக்கியலட்சுமியில் என்ன நடக்கிறது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியின் அம்மாவை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு செல்கிறாள். பின்னர் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது பழனிச்சாமி பண உதவி ஏதாவது தேவைப்பட்டால் தயங்காமல் கேட்க சொல்லி சொல்கிறார். ஆனால் பாக்கியலட்சுமி "அதெல்லாம் ஒன்னும் இல்லை, நானே சமாளிச்சு கொள்கிறேன்" என சொல்கிறாள்.
பின்னர் அமிர்தாவும் எழிலும் வெளியே கிளப்புகிறார்கள். அவர்களை பாக்கியா வாசல் வரை வந்து வழியனுப்புகிறாள். அவர்கள் மூவரும் வாசலில் நின்று பேசிக் கொண்டு இருப்பதை கணேஷ் எதிரில் மறைந்து நின்று பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
அவர்கள் இருவரும் கிளம்பியதும் கணேஷ் ஆவேசப்பட்டு அவர்களை முறைத்து பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து விடுகிறாள் பாக்கியா. கணேஷூம் அங்கிருந்து சென்று விடுகிறான். ஒன்றும் புரியாமல் பதட்டத்துடன் பாக்கியா பார்த்து கொண்டு இருக்கிறாள். இதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்பது மட்டும் அவளுக்கு தெரிகிறது.
பார்க்கில் ராமமூர்த்தி நிலாவை விளையாட வைத்து கொண்டு இருக்கிறார். அப்போது கணேஷ் அவரிடம் சென்று நிலா பற்றி பேச்சு கொடுக்கிறான். பின்னர் “நான் கொஞ்சநேரம் பாப்பா கூட விளையாடிக்கலாமா, எனக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் என்னுடைய குழந்தை என சொல்லிக்கொள்ளும் சூழ்நிலை இல்லை. அதனால் என்னுடைய குழந்தையாக நினைத்து நிலா பாப்பாவுடன் விளையாடி கொள்ளலாமா?” எனக் கேட்டு விளையாடுகிறான். பிறகு கொஞ்ச நேரம் கழித்து நிலாவை அழைத்துக்கொண்டு ராமமூர்த்தி கிளம்பி விடுகிறார்.
வீட்டில் பாக்கியாவும் அமிர்தாவும் சமையல் வேலையே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது செல்வி அங்கு வரவே, பாக்கியா செல்விக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்கிறாள். “உனக்கு எதுக்கு இவ்வளவு பணம்" என செல்வி கேட்க, தன்னோடும் இருந்த சில நகைகளை அடகு வைத்தாக பாக்கியா சொல்கிறாள்.
கேன்டீனில் இருந்து வர வேண்டிய பணம் வந்தால் கொஞ்சம் சமாளிக்கலாம், ஆனால் ஏதேதோ பேப்பர்களை கொடுக்க சொன்னார்கள். ஆனால் பணம் மட்டும் வந்த பாடில்லை என வருத்தத்துடன் சொல்கிறாள் பாக்கியா. அமிர்தா நான் மெயில் போட்டு பார்க்கிறேன் என சொல்லவும் பாக்கியாவும் போட சொல்கிறாள்.
கணேஷ் அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு வந்து கணேஷூக்கு போன் செய்கிறார்கள். போனை எடுத்த கணேஷ் “நான் அமிர்தாவுடன் தான் ஊருக்கு வருவேன் என சொல்லிவிட்டேன். பிறகு எதற்கு போன் செய்கிறீர்கள்?” என அவர்களைக் கத்துகிறான். “நீ வர வேண்டாம் பா.. நங்கள் உன்னைத் தேடி சென்னைக்கு வந்து இருக்கிறோம். எங்கே வரவேண்டும் என்பதை சொல்லு. உன்னை நேரில் பார்த்து சில விஷயங்களைப் பேச வேண்டும்” என்கிறார் கணேஷின் அம்மா. கணேஷ் யோசிக்கிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.