Baakiyalakshmi: சிக்கிய செழியன்.. பாக்யா வீட்டுக்கு வந்து தாண்டவம் ஆடிய மாலினி.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று..!
Baakiyalakshmi Nov 6 : பாக்கியா வீட்டில் காலையிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி. வீட்டுக்குள் நுழைந்து செழியனுடன் இருக்கும் உறவை பற்றி உடைத்து ஷாக் கொடுக்கிறாள் மாலினி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் அதிரடியாக வீட்டில் என்ட்ரி கொடுத்த மாலினியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கோபியை பார்த்து "நீங்க தான் செழியனோட அப்பாவா? நான் மாலினி" என தன்னை கோபியிடம் அறிமுகப்படுத்தி கொள்கிறாள் மாலினி. "நான் தான் உன்னை ஆபிஸ் வேலையை ஆபீஸிலேயே வைத்து பேசுன்னு சொன்னேன்ல. நீ வீட்டுக்கு வர கூடாது என சொல்லியும் என் வந்த. முதலில் இங்க இருந்து கிளம்பு" என மாலினியை பாக்கியா விரட்ட மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக ராமமூர்த்தியும் மாலினியை கிளம்ப சொல்கிறார்.
"நான் ஆபீஸ் விஷயமா வரலை. பர்சனலா நான் செழியன் கிட்ட பேசணும்" என சொல்லி "செழியா கீழ இறங்கி வா" என நடுவீட்டில் நின்று கொண்டு பயங்கரமாக கத்துகிறாள் மாலினி. அதை பார்த்து அனைவரும் அவளை திட்டுகிறார்கள். கீழே இறங்கி வந்த செழியன் மாலினியை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். "என்ன ஆண்ட்டி என்ன பார்த்த பயமா இருக்கா" என பாக்கியவை பார்த்து கேட்கிறாள் மாலினி. "நான் எதுக்கு உன்னை பார்த்து பயப்படணும். என்ன மிரட்டுறீயா?" என பாக்கியா கேட்க "நான் உண்மையை சொல்ல தான் வந்தேன். செழியா நீ சொல்றியா இல்ல நானே சொல்லவா?" என சொல்ல "அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நீ கிளம்பு இங்கே இருந்து. வா ஜெனி நாம மேல போகலாம்" என அழைக்கிறான் செழியன்.
"இவங்க ஏதோ சொல்லணும்ன்னு சொல்றங்க இல்ல. சொல்லட்டும்"என ஜெனி சொல்ல "இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க எல்லாருக்கும் உண்மை தெரிந்து விடும்" என மாலினி பீடிகை போட "நீ சொல்ல வேண்டாம், நானே சொல்றேன்" என செழியன் சொல்கிறான். அதற்குள் மாலினி "செழியன் என்னை ஏமாத்திட்டான். நான் ஏமாந்து போய் நிக்கிறேன்" என மாலினி சொல்ல "நான் இவளை ஏமாத்தவில்லை. என்னை நம்புங்கள். இவ பொய் சொல்றா" என கதறுகிறான் செழியன்.
செழியனுடன் பேசி பழகியதை பற்றி மாலினி சொல்ல "இது எல்லாம் தெரிந்ததுதானே. இதுல ஏமாத்துறதுக்கு என்ன இருக்கு" என ஜெனி மாலினியிடம் கேட்கிறாள். "அப்போ உங்களையும் ஏமாத்தி இருக்கான் ஜெனி" என மாலினி சொன்னதும் ஜெனி அதிர்ச்சி அடைகிறாள்.
"எனக்கும் செழியனுக்கும் ஆபீஸ் தவிர வேற ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு" என மாலினி சொன்னதும் வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்கள் நம்பாமல் செழியனுக்கு சப்போர்ட்டாக பேச மாலினி "செழியன் கல்யாணம் நடந்ததை பத்தி எல்லாம் சொல்லாமல் மறைச்சு தான் என்னிடம் பழகினான். குழந்தை பிறந்த பிறகு தான் சொன்னான். ஜெனிக்கு என்னை பிடிக்கவில்லை. எங்க இரண்டு பேருக்கும் ஒத்துவரவில்லை. நான் அவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் எல்லாம் சொன்னியே" என மாலினி ஷாக் கொடுக்க "நான் சொல்லவில்லை ஜெனி" என கதறுகிறான் செழியன்.
"இத்தனை நாள் நான் பொறுமையா இருந்தேன். இனிமேல் என்னால் இருக்க முடியாது. என்னிடம் இருந்து விலகி போகிறான். எல்லாரும் தான் நியாயம் சொல்லணும்" என மாலினி சொல்ல "யாரும் இவளை நம்பாதீங்க" என செழியன் சொல்ல "எனக்கு ஒரு பதில் கிடைக்காமல் நான் இங்க இருந்து போகமாட்டேன்" என மாலினி விடாபிடியாக பேசி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொடுத்த போட்டோவை காட்ட வீட்டில் உள்ள அனைவரும் அப்படியே உறைந்து போய் நிற்கிறார்கள்.
ஜெனிக்கு தலையே சுற்றுகிறது. "பாருங்க இன்னும் நிறைய போட்டோஸ் இருக்கு. இந்த விடியோவை பாருங்க" என சொல்லி மாலினி மடியில் செழியன் படுத்து கொண்டு பேசும் வீடியோவை காட்டுகிறாள் மாலினி. கலங்கி நிற்கிறாள் ஜெனி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.