Baakiyalakshmi: பாக்கியாவுக்கு ராதிகா வைத்த ஆப்பு... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடப்பது என்ன?
Baakiyalakshmi : அவதூறாக பேசிய கோபிக்கு சரியான பதிலடி கொடுத்தார் பழனிசாமியின் அம்மா. பாக்கியாவை கேன்டீன் விட்டு விரட்ட பிளான் ராதிகா போட்ட காட்சிகள் இன்றைய சீரியலில் இடம் பெறுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மா கணேஷை வெளியில் தள்ளி கதவை மூடிக்கொண்டதால் அழுது கொண்டே திரும்பிய கணேஷ் கோபமாக வீட்டுக்கு வருகிறான். கணேஷ் அவனுடைய அம்மா அப்பாவிடம் "அமிர்தா உண்மையிலேயே உயிரோடு இருக்காளா? என்னோட குழந்தை உயிரோட தான் இருக்கா? சொல்லுங்க" என அவர்களிடம் கேட்ட அதிர்ச்சி அடைகிறார்கள்.
அமிர்தா வீட்டுக்கு போனது பற்றியும் அவங்க அம்மா வெளியில் போக சொல்லி அவனை விரட்டாத குறையா வெளியில் தள்ளி கதவை மூடிக்கிட்டாங்க. அமிர்தாவோட போன் நம்பர் கேட்டா கூட கொடுக்கல" என்கிறான். கணேஷின் அம்மாவும் அப்பாவும் "நீ எதுக்கு அங்க போன? நாங்க தான் தேடி கண்டுபிடிச்சு சொல்றோம் என சொன்னோம்ல" என்கிறார்கள்.
"நீ இறந்து போனதா கிடைச்ச தகவலுக்கு பிறகு அவங்க வீட்ல உன்னோட ஜாதகத்தை எடுத்துட்டு போய் ஜோசியர் கிட்ட கேட்டு இருக்காங்க. நாங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணி வைச்சுட்டோம் என கோபமா பேசினாங்க. அது பிறகு அது பெரிய சண்டயாயிடுச்சு. அதற்கு அப்புறம் நாங்களே அமிர்தாவையும் குழந்தையும் பார்க்கவே இல்லை" என பொய் சொல்லி சமாளிக்கிறார்கள். அதை கேட்ட கணேஷ் "எனக்கு மட்டும் உண்மை என்னனு தெரிய வரட்டும் அப்புறம் இருக்கு" என சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறான்.
கோபி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று பழனிச்சாமியை மோசமாக பேசுகிறார். "பாக்கியாவுக்கு என்ன பிரச்சினை என்றாலும் உடனே நீ போய் முன்னாடி நிப்பியா? உனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல அந்த பாக்கியாவும் தனியா இருக்கா அதனால அவளை கரெக்ட் பண்ணலாம்னு பாக்குறியா? அவளே பாட்டியாக போறா" என அசிங்கமாக பேச கோபப்பட்ட பழனிசாமி "தேவையில்லாம அசிங்கமா பேசாதீங்க. உங்களை நான் எங்கேயோ வைச்சு பார்த்தேன். ஆனால் நீங்க இவ்வளவு தரக்குறைவா பேசுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல" என சொல்கிறார்.
அப்போ பழனிச்சாமியின் அம்மா வந்து "இது உனக்கு தேவையில்லாத விஷயம், நான் நாளைக்கே என்னோட பையனுக்கும் பாக்கியாவுக்கும் கல்யாணம் பண்ணி வைப்பேன்" என சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் கோபி. அங்கிருந்து கிளம்பியதும் பழனிச்சாமி அவருடைய அம்மாவிடம் "ஏன் அப்படி சொன்னீங்க அம்மா? நானும் பாக்கியா மேடமும் என்னிக்குமே நாங்க இரண்டு பேரும் நண்பர்களாக மட்டும் தான் இருப்போம். நீங்க வேற எதை பத்தியும் யோசிக்காதீங்க" என சொல்லிவிட்டு செல்கிறார் பழனிச்சாமி.
கோடீஸ்வரன் ராதிகாவை அழைத்து "என்னை ஹெட் ஆஃபீஸ்ல கூப்பிடுறாங்க அதனால் நான் உடனே அமெரிக்கா கிளம்ப வேண்டி இருக்கு. நான் இல்லாத இந்த இரண்டு மாசம் நீங்க தான் இந்த மொத்த ஆபிசையும் பொறுப்போடு பாத்துக்கணும். எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. எல்லா முக்கியமான முடிவையும் நீங்களே எடுக்க வேண்டி இருக்கும். ஏதாவது தேவைன்னா என்னை காண்டாக்ட் பண்ணுங்க" என சொல்ல அது ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
கேன்டீனில் பாக்கியா மற்றவர்களிடம் நாளை முதல் ஆப்பத்தையும் மெனு லிஸ்டில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டு இருக்கிறாள். அப்போது ராதிகா அங்கே வந்து மெயில் பாத்தீங்களா? என பாக்கியாவிடம் கேட்கிறாள். "நீங்க கேன்டீன் காண்ட்ராக்ட் எடுத்து எத்தனை மாசம் ஆகுது?" என கேட்கிறாள் ராதிகா. பாக்கியா 7 மாசம் என சொன்னதும் "ராதிகா கார்ப்பரேட் ரூல்ஸ் படி ஆறு மாசம் தான் கேன்டீன் காண்ட்ராக்ட் கொடுக்க முடியும். அதனால் நீங்க உங்களோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிளம்புற வழிய பாருங்க" என பாக்கியாவுக்கு ஷாக் கொடுக்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.