Baakiyalakshmi: பாக்கியாவை தூக்கி எறிந்த ஜெனி... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்... பாக்கியலட்சுமியில் நடந்தது என்ன?
Baakiyalakshmi Nov 7 : செழியன் செய்த துரோகத்தால் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (நவம்பர் 7) எபிசோடில் மாலினி செழியனுடன் எடுத்துக்கொண்ட அனைத்து வீடியோ போட்டோ ஆதாரங்களையும் காட்டி செழியன் அவளை ஏமாற்றிவிட்டதாக சொல்லி பெரிய டிராமா போடுகிறாள். அதை பார்த்த வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
"செழியனும் நானும் பழகுறது பாக்கியா ஆண்ட்டிக்கு கூட தெரியும். அவங்க என்னை கோயிலில் வந்து சந்தித்து எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் என சொன்னாங்க. ஆனா இதுவரைக்கும் அவங்க எதுவுமே செய்யல. அதனால தான் நான் நேரில் வந்தேன்" என சொன்னதும் கோபி ஈஸ்வரி என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "உனக்கு முன்னாடியே தெரியுமா?. அப்ப ஏன் வீட்ல இருக்க யாரிடமும் சொல்லலை" என பாக்கியாவிடம் ஈஸ்வரி கேட்க "தெரியும். ஆனா சொல்ல முயற்சி பண்ணேன். என்னை எங்க பேச விட்டீங்க. யாருமே காதில் வாங்கவே இல்லை" என சொல்கிறாள் பாக்கியா.
அனைவரும் சேர்ந்து மாலினியை வீட்டை விட்டு விரட்டுகிறர்கள். "உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்" என சவால் விடுகிறாள் மாலினி. அதிர்ச்சியில் ஜெனிக்கு தலையெல்லாம் சுற்ற பாக்கியா வந்து அவள் கையை பிடிக்க ஜெனி தட்டி விடுகிறாள். "அவ சொல்றது எல்லாம் பொய். அவளை நம்பாத ஜெனி" என செழியன் அழ அவனை பளார் என அறைந்து "எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு. அப்போ இத்தனை நாளா என்கிட்டே நடிச்சிருக்க. அவகிட்ட போய் என்னை பத்தி தப்பு தப்பா பேசி உன்னை நல்லவன் மாறி காட்டி இருக்க" என கேள்வி மேல் கேள்வி கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அனைவரும் ஜெனியை சமாதானம் செய்ய யாருடைய பேச்சையும் அவள் கேட்பதாக இல்லை. "என்னால் இனி இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது" என குழந்தையை தூக்கிக்கொண்டு ஜெனி செல்ல பாக்கியா குழந்தை மீது கை வைக்க "உங்க யாருக்கும் என்னோட குழந்தை மீது எந்த உரிமையும் கிடையாது" என அதிர்ச்சி கொடுக்கிறாள் ஜெனி. "சரி வீட்டுக்கு போறதா முடிவு பண்ணிட்டா. வா நான் கொண்டு போய் விடுறேன்" என பாக்கியா சொல்ல "யாரும் என்னுடன் வர தேவை இல்லை. நான் தான் இத்தனை நாளா பைத்தியம் மாதிரி ஆண்ட்டி ஆண்ட்டின்னு உங்க பின்னாடியே சுத்தி வந்து இருக்கேன். நீங்க போய் உங்க பையனுக்கே சப்போர்ட் பண்ணுங்க" என சொல்லி பாக்கியாவிடம் கோபத்தை காட்டிவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு செல்கிறாள் ஜெனி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.