மேலும் அறிய
Advertisement
Baakiyalakshmi August 17 episode: ஈஸ்வரி செய்த சிறப்பான சம்பவம்... பாக்கியா போட்ட பிளான்...இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் இதோ..!
*இனியாவை மூச்சு பயிற்சி சொல்லி தருகிறேன் என படுத்தும் ஈஸ்வரி* பாக்கியாவை காலேஜ் போகவிடாமல் செய்ய இனியா எடுத்த முயற்சி*பழனிச்சாமி அவரின் அம்மாவிடம் வைத்த வேண்டுகோள்இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் ஏதேதோ கதைகளை எல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறார். அதை கேட்ட ராமமூர்த்தி "நீ காசிக்கு போய் நிறைய கதை தெரிஞ்சுக்கிட்டு வந்து இருக்க" என சொல்கிறார்.
ஈஸ்வரி இனியாவிடம் ஏதோ கேட்க அதை கவனிக்காமல் போனை பார்த்து கொண்டு இருந்ததால் அவளிடம் இருந்து போனை ஈஸ்வரி பிடுங்கிவிடுகிறார். இனியாவுக்கு கோபம் வர ஈஸ்வரி "நீ சரியாக மூச்சு பயிற்சி செய்யாததால் தான் உனக்கு ரொம்ப கோபம் வருது. போய் பாய் எடுத்துட்டு வா மூச்சு பயிற்சி சொல்லி கொடுக்கிறேன்" என இனியாவை பாடுபடுத்துகிறார்.
அமிர்தா சமைக்கும் போது தெரியாமல் கரண்டியை கீழ் போட்டதால் கோபமான ஈஸ்வரி அமிர்தாவை திட்டுகிறார். அதை பார்த்த ராமமூர்த்தி "என்னோட இங்க ஒரு சாந்த சொரூபிணி இருந்தாங்களே அவங்கள காணும்" என கிண்டல் செய்ய "ஒரே நாளில் எல்லாம் மாறிடுமா? கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்தணும்" என சொல்கிறார் ஈஸ்வரி.
ராமமூர்த்தி அமிர்தாவிடம் காபி எடுத்து வர சொல்ல, ஈஸ்வரி சும்மா காபியெல்லாம் குடிக்க கூடாது என சொல்லி அமிர்தாவை ரூமில் இருக்கும் பாட்டில் ஒன்றை எடுத்து வர சொல்கிறார். அதில் இருப்பதை வைத்து கஷாயம் போட்டு எடுத்து வரச்சொல்லி அனைவரையும் குடிக்க வைக்கிறார். நைசாக ஜெனி நான் கர்பமாக இருப்பதால் டாக்டரிடம் கேட்காமல் எதையும் குடிக்க கூடாது என எஸ்கேப்பாகி விடுகிறாள். மற்றவர்கள் அதை குடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். ஈஸ்வரியும் அதை குடித்து விட்டு "என்ன இது இப்படி கசக்குது" என்கிறார்.
பாக்கியா வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி செய்த கூத்தை பற்றி ஜெனியும் அமிர்தாவும் சொல்கிறார்கள். பாக்கியா இதை இப்படியே விடக்கூடாது, அத்தையை எப்படியாவது பழைய மாதிரி மாற்றியாக வேண்டும் என சொல்லி இப்பவே பாறை மீன் குழம்பு வைக்கிறேன் என பிளான் போடுகிறாள்.
வேலையை எல்லாம் முடித்துவிட்டு படுக்க ரூமுக்கு செல்கிறாள். அங்கு இனியா தூங்காமல் இருப்பதை பார்த்து "ஏன் நீ இன்னும் தூங்கலை இனியா?" என கேட்கிறாள். தூக்கம் வரல என சொல்லி நைசாக பேச ஆரம்பிக்கிறாள். "உனக்கு கஷ்டமா இல்லையா... ஏதாவது ஒரு வேலையை குறைச்சுக்கலாம் இல்ல" என அக்கறையாக பேசுவது போல பேசுகிறாள். அதற்கு பாக்கியா இதை வைத்து தான் நான் வீட்டு செலவுகளை பார்த்து கொள்கிறேன் என சொல்ல "அப்போ காலேஜ் போறத நிறுத்திட்டு எங்களை பார்க்கலாம் இல்லையா" என கேட்கிறாள் இனியா.
"இது நீயா பேசுற மாதிரி இல்லையே... உங்க அப்பா சொல்லி கொடுத்தாரா? " என கேட்கிறாள் பாக்கியா. "யார் சொன்ன என்ன? சொல்ற விஷயம் சரிதானே. எல்லாரோட ஆசையும் நிறைவேறுறது இல்ல இல்லையா" என இனியா செல்கிறாள். "உங்க அப்பா காலேஜில் காதலிச்ச ராதிகாவை இப்போ கல்யாணம் பண்ணிக்கலயா? அவரால இந்த குடும்பத்தில் எத்தனை பிரச்சனை வந்தது. ஆனா நான் காலேஜ் போறதால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே" என்கிறாள் பாக்கியா. அதை கேட்டு இனியா அமைதியாக இருக்கிறாள்.
"இது நீயா பேசுற மாதிரி இல்லையே... உங்க அப்பா சொல்லி கொடுத்தாரா? " என கேட்கிறாள் பாக்கியா. "யார் சொன்ன என்ன? சொல்ற விஷயம் சரிதானே. எல்லாரோட ஆசையும் நிறைவேறுறது இல்ல இல்லையா" என இனியா செல்கிறாள். "உங்க அப்பா காலேஜில் காதலிச்ச ராதிகாவை இப்போ கல்யாணம் பண்ணிக்கலயா? அவரால இந்த குடும்பத்தில் எத்தனை பிரச்சனை வந்தது. ஆனா நான் காலேஜ் போறதால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே" என்கிறாள் பாக்கியா. அதை கேட்டு இனியா அமைதியாக இருக்கிறாள்.
பழனிச்சாமி அவரோட அம்மா கால் வலிக்கு தைலம் வாங்கி வந்து தேச்சுவிடுறார். அப்போ பழனியோட அம்மா "கோபிக்கும் பாக்கியாவுக்கும் தான் விவாகரத்து முடிஞ்சுதுல, அப்புறம் எதுக்காக அவ பின்னாடியே சுத்திகிட்டு இருக்காரு? திரும்பவும் பாக்கியாவோட வாழனும் என நினைக்கிறாரோ?" என அம்மா கேட்க "அதுக்கு வாய்ப்பே இல்லை" என்கிறார் பழனிச்சாமி.
பாக்கியாவுக்கு அது போல ஏதாவது எண்ணம் இருக்கா என கேட்க "நிச்சயமாக கிடையாது. அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் போது எப்படி திரும்பவும் அந்த வாழ்க்கை வேணும் என நினைப்பாங்க " என சொல்கிறார் பழனிச்சாமி. "அப்போ நான் வேணும்னா அவங்க வீட்ல போய் உங்க கல்யாணம் பத்தி பேசிடும்மா?" என கேட்கிறார் பழனியின் அம்மா. "தயவு செய்து அது போல எதுவும் பண்ணிடாதீங்க. அவங்க வீட்ல என்ன புள்ளையாட்டம் நினைக்கிறாங்க. நீங்க போய் ஏடாகூடமா ஏதாவது கேட்டீங்கன்னா நான் அப்புறம் அவங்க மூஞ்சியில் முழிக்கவே முடியாது. நாங்க இரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நண்பர்களாகவே இருந்துட்டு போறோம்" என சொல்கிறார் பழனிச்சாமி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion