மேலும் அறிய

Vela Ramamoorthy : ஏப்பா டேய்! இது எவன் பாக்குற வேலை... வதந்திகளுக்கு சரியான பதிலடி கொடுத்த வேல ராமமூர்த்தி

Vela Ramamoorthy : எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் வேல ராமமூர்த்தி அதில் நடித்ததை அவமானமாக நினைக்கிறார் என பரவிய வதந்திக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.  

சின்னத்திரை என்பதன் அடையாளமாக விளங்கும் சன் டிவி ரசிகர்களின்  பேராதரவை பல ஆண்டுகளாக தக்க வைத்து வருகிறது. அந்த வகையில் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும், சீரியலும் ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்து வருகிறது. அப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரை ரசிகர்களின் தினசரி அட்டவணையில் தவறாமல் இடம் பெற்று வந்த ஒரு சீரியல் 'கோலங்கள்' புகழ் இயக்குநர் திருச்செல்வத்தின் 'எதிர்நீச்சல்' சீரியல். பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கம் கொண்டவர்களுக்கு ஒரு சவுக்கடியாக ஒளிபரப்பான இந்த தொடரில் எப்படி பெண்கள் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி வருகிறார்கள் என்ற கதைக்களத்தை சார்ந்து இருந்தது. மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென முடிவுக்கு வந்தது. 

Vela Ramamoorthy : ஏப்பா டேய்! இது எவன் பாக்குற வேலை... வதந்திகளுக்கு சரியான பதிலடி கொடுத்த வேல ராமமூர்த்தி

எதிர்நீச்சல் சீரியலின் ஆணிவேராக இருந்த கதாபாத்திரம் ஆதி குணசேகரன். சீரியல் துவங்கிய நாள் முதல் அந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக பொருந்தி நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. அவரின் 'இந்தாம்மா ஏய்!' வசனம் மிக பெரிய அளவில் ட்ரெண்டிங்கானது. அவர்  கொடுக்கும் எக்ஸ்பிரஷன், டைலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ், நக்கலும் நையாண்டியும்  கலந்த கர்வமான பேச்சு என மாரிமுத்துவுடைய குணசேகரன் கதாபாத்திரத்தை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தார்கள் என்றால் அது மிகையல்ல. இப்படி பிரபலத்தின் உச்சத்தில் இருந்த நடிகர் மாரிமுத்து சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் இழப்பு மிக பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரனாக 'எதிர்நீச்சல்' சீரியலில் இணைந்தார் நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி. ஏற்கனவே குணசேகரன் கதாபாத்திரத்துக்கு நடிகர் மாரிமுத்து ஒரு பெஞ்ச்மார்க் செட் செய்து வைத்து இருந்ததால் அதையே வேல ராமமூர்த்தியிடம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் தன்னுடைய கரடு முரடான ஸ்டைலில் குணசேகரன் கதாபாத்திரத்துக்கு வேறு ஒரு முகத்தை கொடுத்தார் நடிகர் வேல ராமமூர்த்தி. நாளடைவில் அதையே மக்கள் ஏற்றுக்கொள்ள துவங்கினார்கள். ஆனால் ஒட்டுமொத்த எதிர்நீச்சல் திரைக்கதையும் மாற்றப்பட்டது. ஒரு கட்டத்தில் சீரியலை வேகவேகமாக முடிவுக்கு கொண்டு வந்து திடீரென எண்டு கார்டு போட்டனர். 

Vela Ramamoorthy : ஏப்பா டேய்! இது எவன் பாக்குற வேலை... வதந்திகளுக்கு சரியான பதிலடி கொடுத்த வேல ராமமூர்த்தி

எதிர்நீச்சல் சீரியல் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் பலரும் பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து விமர்சனம் செய்து வந்தார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றில் வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறார் என்றும் அதனால் வேதனையில் இருக்கிறார் என்றும் பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்ததாக தகவல் வெளியாகி அது மிகவும் வைரலானது. இந்த வதந்திக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.  

"எதிர்நீச்சல் சீரியல் என்னை உலக தமிழர்கள் எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்துள்ளது.  அதில் நான் மனப்பூர்வமாய் பங்கேற்றினேன் என்பதே உண்மை. தயவு செய்து இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என பதிவிட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. இந்த தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget