Tamil Serials TRP Ratings: கெத்து காட்டிய பாக்கியலட்சுமி... ஆனாலும் சீரியல் டிஆர்பியில் சன் டிவி தான் முதலிடம்..!
TRP Ratings Week 32 2022: என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பது என்னவோ சில சீரியல்கள் மட்டும் தான்.
கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்கள் டாப் லிஸ்டில் இடம் பெற்றுள்ளதால் விஜய் டிவி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது. இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அறிமுகம் செய்கின்றது.
என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பது என்னவோ சில சீரியல்கள் மட்டும் தான். குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இங்கு நடைபெறும் போட்டி என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஒருகாலத்தில் தங்களை அடிக்க ஆளே இல்லை என நினைத்த சன்டிவியை விஜய், ஜீ தமிழ் சீரியல்கள் ஓரம் கட்டியது தனிக்கதை.
View this post on Instagram
ஆனால் விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில மாதங்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் பின்னால் இருந்த சன் டிவியின் பல சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடங்களை பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த வார ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டது. 11.30 புள்ளிகளுடன் கயல் (சன் டிவி) சீரியல் முதலிடமும், 10.91 புள்ளிகளுடன் வானத்தைப்போல (சன் டிவி) இரண்டாமிடமும், 10.13 புள்ளிகளுடன் சுந்தரி (சன் டிவி) 3 ஆம் இடமும், கண்ணான கண்ணே (சன் டிவி) 9.88 புள்ளிகளுடன் 4 ஆம் இடமும், 9.33 புள்ளிகளுடன் ரோஜா (சன் டிவி) 5 ஆம் இடமும் பெற்றுள்ளது.
View this post on Instagram
இதில் 6வது இடத்தை தான் பாக்கியலட்சுமி சீரியல் 8.89 புள்ளிகளுடன் பெற்றுள்ளது. ஆனால் விஜய் டிவி அளவில் இது முதலிடம் பெற்றுள்ளது. 8.13 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் (சன் டிவி) 7வது இடத்தையும், பாரதி கண்ணம்மா (விஜய் டிவி) 8.37 புள்ளிகளுடன் 8வது இடமும், 6.62 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ( விஜய் டிவி) 9வது இடத்தையும், 5.87 புள்ளிகளுடன் ராஜா ராணி 2 (விஜய் டிவி) 10வது இடத்தையும் பெற்றுள்ளது.