மேலும் அறிய

Ethirneechal: பொங்கி எழுந்த ஆதிரை.. அவமானப்படுத்திய குணசேகரன்.. எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal Dec 18: எஸ்.கே.ஆர் வீட்டுக்குச் சென்று குணசேகரன் தன்னுடைய திமிரைக் காட்ட அங்கே வந்த ஆதிரை அது அனைத்தையும் சுக்குநூறாகிவிட்டாள். இன்றைய பரபரப்பான எதிநீச்சல் ப்ரோமோ வெளியாகியுள்ளது!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் கதிருக்கு கை கால் அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதை பார்த்த குணசேகரன் ஆவேசத்தில் கதிரின் இந்த நிலைக்கு காரணமானவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என சபதமிடுகிறார்.

கதிர் அடிபட்டாவது திருந்துவான் என எதிர்பார்த்தால், திமிரு கொஞ்சமும் குறையாமல் அதே எரிச்சலை மனைவியிடமும் மக்களிடமும் காட்டுகிறான்.  அனைத்தையும் பொறுத்துக் கொண்டு நந்தினி கதிருக்கு தேவையான அனைத்து வேலைகளையும் சகித்துக் கொண்டு செய்கிறாள். அதை பார்த்த கதிர் வார்த்தைகளால் சொல்லவில்லை என்றாலும் அவனது கண்ணீர் மூலம் உணர்ச்சி வெளிப்பட்டது.

Ethirneechal: பொங்கி எழுந்த ஆதிரை.. அவமானப்படுத்திய குணசேகரன்.. எதிர்நீச்சலில் இன்று!
அருண் விபத்தில் சிக்கி கால் இழந்ததற்கு காரணம் குணசேகரன் தான் என்ற உண்மையை அறிந்து கொண்ட ஆதிரை, வீட்டை விட்டு கிளம்பி செல்ல முடிவு எடுக்கிறாள். அவளைத் தடுத்த ஜான்சி ராணியை ஓங்கி கன்னத்தில் அறைந்து விடுகிறாள். அதை சற்றும் எதிர்பார்க்காத ஜான்சி அப்படியே உறைந்து போய் நிற்கிறாள்.

குணசேகரன் எஸ்.கே.ஆர் வீட்டுக்குச் சென்று ரகளை செய்வதற்காக தம்பிகளையும் கரிகாலனையும் அழைத்து கொண்டு செல்கிறார். அத்துடன் சென்ற வார எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal: பொங்கி எழுந்த ஆதிரை.. அவமானப்படுத்திய குணசேகரன்.. எதிர்நீச்சலில் இன்று!
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குணசேகரன் எஸ்.கே.ஆர் வீட்டில் வந்து உட்கார்ந்து திமிராக பேசிக்கொண்டு இருக்கிறார். எஸ்.கே.ஆருடன் சாருபாலாவும் இருக்கிறார். "என்னோட தம்பியை பழிவாங்க வேண்டும் என நினைச்சு அடிச்சது நீதானே..." எனக் கேட்கிறார் குணசேகரன். "என்னோட தம்பி அருணுக்கு கார் ஆக்சிடன்ட் பண்ணது நீ தான்னு ஒத்துக்குறியா" என திருப்பி எஸ்.கே.ஆர் கேட்க, குணசேகரன் முகமே மாறிவிடுகிறது.

Ethirneechal: பொங்கி எழுந்த ஆதிரை.. அவமானப்படுத்திய குணசேகரன்.. எதிர்நீச்சலில் இன்று!

அந்த நேரம் பார்த்து பெட்டி படுக்கையுடன் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு வருகிறாள். அவள் அங்கு வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "எங்க அண்ணன் தான் அருணோட ஆக்சிடென்ட்டுக்கு காரணம் மேம்" என சாருபாலாவிடம் சொல்லி அழுகிறாள் ஆதிரை. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கரிகாலன் "என்ன சொல்லிக்கிட்டு இருக்க நீ" என ஆதிரையை நெருங்க, கரிகாலனை ஓங்கி கன்னத்தில் அறைகிறாள் ஆதிரை. அதைப் பார்த்த குணசேகரனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

"உனக்கு இந்த வீட்டில் இடம் கிடையாது" என எஸ்.கே.ஆர் ஆதிரையிடம் சொல்ல "இல்லை ராஜா... ஆதிரை இங்க தான் இருப்பா" என சாருபாலா சொல்ல, குணசேகரன் தலையில் அடுத்த இடி விழுந்தது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

எதிர்நீச்சல் தொடர் மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கியதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் எதிர்நீச்சல் ரசிகர்கள். ஆதிரைக்கு இப்போது தான் குணசேகரனை எதிர்க்க துணிச்சல் வந்துள்ளது. இனி அவள் சந்திக்கப் போகும் சவால்கள் என்னென்ன? வரும் எபிசோடுகளில் அதற்கான விடை கிடைக்கும்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு

இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்

ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?

Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?

ABP Premium

வீடியோ

‘’ஆளுநர் பதவி..MP சீட் !’’OFFER கொடுத்த பாஜகஓகே சொன்ன OPS?DEAL OVER!
20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ; வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல் !! மடக்கிய போலீஸ்

Hyundai Bayon: ஃப்ராங்க்ஸை விடவேக்கூடாது..! ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் க்ராஸ்-ஓவர், ஹைப்ரிட் இன்ஜின்.. ரூ.7 லட்சமே

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
இனி வீடு, நிலம் வாங்க பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை.! இன்று முதல் அசத்தல் திட்டம் அறிமுகம்

Embed widget