மேலும் அறிய

Ethirneechal: திடீரென வந்து போன குணசேகரன்... கையும் களவுமாக சிக்கிய நந்தினி.. எதிர்நீச்சலில் இதுவரை நடந்தது என்ன?

Ethirneechal Sep 25 episode: ஆதாரமாக செருப்பை விட்டு சென்ற குணசேகரன் கதிருக்கு சாமியார் மூலம்  தகவல் சொல்கிறார். கதிரிடம் வசமாக நந்தினி சிக்கி கொண்ட காட்சிகள் நேற்றைய எதிர்நீச்சலில் இடம் பெற்றது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் சாமியார் குணசேகரனை அழைத்து வருகிறார். காரில் இருந்து இறங்கிய குணசேகரன் தம்பிகளை பார்க்க செல்கிறார். லெக் ஷாட்டில் மட்டுமே குணசேகரனை காட்டுகிறார்கள். தம்பிகள் இருவரும் அசந்து தூங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை சாமியார் எழுப்புகிறேன் என சொன்னாலும் வேண்டாம் நான் சொல்வதை மட்டும் அவர்களிடம் சொல்லி விடுங்கள் என சொல்லிவிட்டு தனது ஞாபகமாக இருக்கட்டும் என சொல்லி  செருப்புகளை தம்பிகளின் செருப்புக்கு பக்கத்தில் விட்டுவிட்டு செல்கிறார் குணசேகரன். 

வீட்டில் அனைவரும் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு இருக்க வெண்பா படிப்பதை மூடிவைத்துவிட்டு சோகமாக இருக்கிறாள். அதை பார்த்த ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்டதும் "எனக்கு அப்பா கிட்ட பேசணும்" என சொல்கிறாள் வெண்பா. ஈஸ்வரி வெண்பாவை உள்ளே அழைத்து சென்று ஜீவானந்தத்திற்கு போன் செய்து கொடுக்கிறாள். 

 

Ethirneechal: திடீரென வந்து போன குணசேகரன்... கையும் களவுமாக சிக்கிய நந்தினி.. எதிர்நீச்சலில் இதுவரை நடந்தது என்ன?


"எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு. நீங்க எப்போ வருவீங்க?" என வெண்பா கேட்கிறாள். "நான் சீக்கிரம் வந்து விடுவேன். நீ ஈஸ்வரி ஆண்டிக்கு தொந்தரவு செய்யாமல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்" என ஜீவானந்தம் சொல்கிறார். பின்னர் ஈஸ்வரியிடம் கயல்விழி பற்றிய ஞாபகங்களை பற்றி சொல்லி கவலை படுகிறார். 


ஞானம் தூங்கி எழுந்ததும் சாமியாரிடம் போய் "எங்கய்யா எங்க அண்ணன்? எங்களை ஏமாத்துறியா?" என கேட்கிறான் கதிர். "உங்க அண்ணன் வந்தாரு. நீங்க நல்லா தூங்கிகிட்டு இருந்தீங்க. அதனால் அவர் சொல்ல சொல்லிட்டு கிளம்பிட்டாரு" என்கிறார் சாமியார். "எனக்கு தெரியும் நீ பிராடுன்னு. தூங்குனா எழுப்ப வேண்டியது தானே" என்கிறான் கதிர். "அவருக்கு விருப்பமில்லை. வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு. உங்க ஊர்ல இப்போ திருவிழா வர போகுதுல அதை நல்லபடியா சிறப்பா செய்யணும் என சொன்னாரு. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா அங்க பாருங்க" என குணசேகரன் விட்டு சென்ற செருப்பை காட்டுகிறார் சாமியார். 


"திருவிழாவுக்கு அந்த ஜீவானந்தமும் அப்பத்தாவும் நிச்சயமாக வரவேண்டும். உங்க அண்ணன் வந்து இறங்கும் போது அவர்கள் இருவரும் உயிருடன் இருக்க கூடாது. இதுவரைக்கும் அவர்களுக்கு தேவையான எல்லாம் நான் செய்து விட்டேன். எனக்காக அவர்கள் இதை செய்தால் தான் அவர்கள் என்னுடைய தம்பிகள்" என குணசேகரன் சொன்னதாக கதிரிடம் சாமியார் சொல்கிறார். 


அடுத்த நாள் கேட்டரிங் சமையலுக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனனியும் சக்தியும் இல்லாததால் தனியாக நந்தினி ஆட்டோவில் செல்ல எல்லாத்தையும் வெளியில் எடுத்து வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து கதிரும் ஞானமும் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள். வேகவேகமாக சமைத்து வைத்த அனைத்தையும் மறைத்து வைக்கிறார்கள். 

 

Ethirneechal: திடீரென வந்து போன குணசேகரன்... கையும் களவுமாக சிக்கிய நந்தினி.. எதிர்நீச்சலில் இதுவரை நடந்தது என்ன?


விசாலாட்சி அம்மாவிடம் நடந்த அனைத்து விஷயத்தை பற்றி சொல்கிறார்கள். அதை கேட்ட கரிகாலன் "என்னை கிறுக்கு பய என சொல்லிப்புட்டு நீங்க அங்க போய் தூங்கிட்டீங்களா" என சொல்கிறான். அவனை திட்டிய கதிர் "எங்க அண்ணன் வருவாரு" என சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் செல்கிறான். "இன்னும் ஒரு வாரம் தான் எங்க அண்ணன் வந்துருவாரு. அதுக்கு அப்புறம் உங்க எல்லாருக்கும் இருக்கு" என மிரட்டிவிட்டு திரும்புகையில் கேட்டரிங் ஆர்டருக்கு சமைத்து வைத்துள்ள  பாத்திரங்களை பார்த்துவிடுகிறான் கதிர். நந்தினி திருதிருவென முழிக்க கதிர் அவர்களை பார்த்து முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
என் பையன் முன்னாடி ஷார்ட்ஸ் தான் போடுவேன்...குழந்தை வளர்ப்பு பற்றி சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத்
என் பையன் முன்னாடி ஷார்ட்ஸ் தான் போடுவேன்...குழந்தை வளர்ப்பு பற்றி சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget