மேலும் அறிய

Actor Marimuthu: ராதிகா, கிழக்கு வாசலில் நடிக்க கூப்பிட்டாங்க... எஸ்.ஏ.சி கதாபாத்திரம்...வருந்திய ‘எதிர்நீச்சல்’ குணசேகரன்!

“கிழக்கு வாசல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு தான் கிடைத்தது” - எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து

சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடராக மட்டுமின்றி டி.ஆர்.பி ரேட்டிங்கின் படி முன்னிலையில் இருக்கும் எதிர் நீச்சல் தொடரின் நாயகனாக குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வரும் நடிகர் மாரிமுத்துவுக்கு, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை  ஒவ்வொரு நாளும் பல சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. ஒரு நெகடிவ் கதாபாத்திரம் என்றாலும் அவரின்  முத்திரை பதிக்கப்பட்ட "இந்தம்மா ஏய்!" வசனம், உடல் மொழி இவற்றுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Actor Marimuthu: ராதிகா, கிழக்கு வாசலில் நடிக்க கூப்பிட்டாங்க... எஸ்.ஏ.சி கதாபாத்திரம்...வருந்திய ‘எதிர்நீச்சல்’ குணசேகரன்!

நடிகர் மாரிமுத்து நடிகராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள மாரிமுத்து, எதிர் நீச்சல் சீரியல் மூலம் உலகளவில் பிரபலமாகி விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசுகையில் "விஜய் டிவியில் ராதிகா சரத்குமார் தயாரித்து நடிக்கும் 'கிழக்கு வாசல்' தொடரில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்taது. குடும்பp பாங்கான கதை, மிகவும் வெயிட்டேஜ் உள்ள கதாபாத்திரம் என சொல்லி அழைப்பு வந்தது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சமயத்தில் ராதிகா மேடம் வந்து அழைத்த போதிலும் என்னால் அவரின் ஆஃபரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் தான் அந்த வாய்ப்பு எஸ்.ஏ. சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. 

எதிர் நீச்சல் தொடர் சுமார் 1500 எபிசோட் வரை ஒளிபரப்பாகும் எனth தெரிவித்துள்ளனர். வேற சீரியலில் நிச்சயமாக நடிப்பேன் ஆனால் எதிர்நீச்சல் முடியும் வரை வேறு எந்த சீரியலிலும் கமிட்டாக முடியாது. ஷூட்டிங் மற்றும் டப்பிங் சென்று வரவே இரவு 1 மணி ஆகிவிடுகிறது. கிழக்கு வாசல் வாய்ப்பை இழந்தது கொஞ்சம் கவலையாக இருந்தாலும், என்னுடைய சூழ்நிலை அப்படி இருந்தது" என்று பேசியுள்ளார் நடிகர் மாரிமுத்து. 

Actor Marimuthu: ராதிகா, கிழக்கு வாசலில் நடிக்க கூப்பிட்டாங்க... எஸ்.ஏ.சி கதாபாத்திரம்...வருந்திய ‘எதிர்நீச்சல்’ குணசேகரன்!
விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மெகா தொடர் 'கிழக்கு வாசல்'. ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலில் ராதிகா சரத்குமார், எஸ்.ஏ. சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட், ஆனந்த்பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடங்கும் நாள் நேரம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget