Siragadikka Aasai: கிரிஷ் மீது ரோகிணி காட்டும் பாசம்: மீனாவுக்கு வந்த சந்தேகம்: எப்படி சமாளித்தாள் ரோகிணி? இன்றைய சிறகடிக்க ஆசை அப்டேட்
Siragadikka Aasai : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai Written Update : 'சிறகடிக்க ஆசை' இன்றைய (ஜூன் 7) எபிசோடில் கிரிஷ் கண்கட்டை பிரிப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்கள். அவர்களை விஜயா அவமானப்படுத்தி இனி இந்த பக்கம் வராதீங்க என சொல்லி அனுப்புகிறாள். மீண்டும் கிரிஷ் பிறப்பை பற்றி விஜயா அசிங்கமாக பேசியதால் ரோகிணி விஜயாவை சத்தம் போட்டு அடக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சின்ன பையனிடம் இப்படி பேச வேண்டாம் என சொன்னேன் என சொல்லி சமாளிக்கிறாள்.
இது போல சத்தம் போட்டு பேசி இருந்தால் நேற்றே வெளியில் போய் இருப்பார்கள். நீ தான் ஏதோ செய்கிறேன் என சொதப்பி வைச்ச என விஜயா ரோகிணியிடம் சொல்ல அப்போ நேற்று பிளான் செய்து தான் அனைவரையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பினாயா என முத்து ரோகிணியின் பிளானை கண்டுபிடித்துவிட்டான்.
மனோஜ் கிரிஷும் அவனுடைய பாட்டியும் வீட்டை விட்டு கிளம்பியதால் இனி ரூம் நமக்கு தான் என சொல்லி ரோகிணியின் அம்மா வீட்டை பற்றி இளக்காரமாக பேசுகிறான். அதை கேட்டு ரோகிணி மனோஜை திட்டிவிடுகிறாள். மனோஜுக்கு ரோகிணியின் நடவடிக்கை குழப்பத்தை கொடுக்கிறது.
கிரிஷுக்கு மருத்துவர் கண்கட்டை பிரிக்கிறார். பிரிந்ததும் அவன் ஆசைப்பட்டது போல ரோகிணியை தான் பார்க்கிறான். ரோகிணி கிரிஷுடன் ஆசையாக பேசி கொண்டு இருக்கையில் மருந்து வாங்க சென்று முத்துவும் மீனாவும் வந்து விடுகிறார்கள்.
ரோகிணி அங்கே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பேக்கை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார்கள். அதை கொடுப்பதற்காக தான் வந்தேன் என சமாளிக்கிறாள் ரோகிணி. கிரிஷ் பாட்டியிடம் அவனுடைய அத்தைக்கு போன் செய்து கொடுக்குமாறு மீனா கேட்க ரோகிணியின் அம்மா எதைஎதையோ சொல்லி சமாளிக்கிறார்.
நான் வரும்போது ஏதோ கிரிஷ் கிட்ட பாசமா பேசிகிட்டு இருந்தீங்களே.. அவன் கூட அம்மா என பேசிட்டு இருந்தானே என மீனா ரோகிணியிடம் கேட்க அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சாதாரணமாக தான் பேசிகிட்டு இருந்தேன் என ரோகிணி சொல்கிறாள். உங்க வீட்டில் இருந்தபோது கிரிஷை பாசமா பாத்துக்கிட்டாங்க இல்லையா அதனால் அவன் ஒட்டிக்கிட்டான் என கிரிஷ் பாட்டி சொல்லி சமாளிக்கிறார்.
குழந்தைகள் எப்போதுமே அப்படி தான். நீ அவனை பாசமாக பார்த்து கொண்டதால் உன்னை அம்மா போல நினைக்கிறான். ஆனால் உன்னுடைய பிளான் என்ன என்பது அவனுக்கு தெரியாது பாவம் என ரோகிணியை குத்தி காட்டி பேசுகிறான். அவளுக்கு முகமே மாறிவிடுகிறது. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.