Siragadikka Aasai June 15: போலீசிடம் சிக்கிய பி.ஏ... விஜயாவுக்கு ரோகிணி கொடுத்த புது ஐடியா... சிறகடிக்க ஆசையில் இன்று...
Siragadikka Aasai serial today : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai Serial Today June 15 Episode : சிட்டியிடம் இருந்து தப்பித்த பி.ஏ ஒரு பாட்டியை இடித்துவிட்டு நிறுத்தாமல் செல்ல, அந்த வழியாக வந்த முத்துவும் செல்வமும் அந்த பக்கமாக வர பாட்டியிடம் செல்வதை விட்டுவிட்டு முத்து அந்த பி.ஏவை விரட்டி கொண்டு செல்கிறான்.
அவனை மடக்கி பிடித்து அடித்து வெளுத்து வாங்கிகிறான் முத்து. அதை சிட்டியும் அவனுடைய கூட்டாளியும் மறைந்திருந்து பார்க்கிறார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த போலீசிடம் முத்து அவன் பாட்டியை இடித்து விட்டு நிற்காமல் வந்தது பற்றி சொல்லி பிடித்து கொடுக்கிறான். "இவன் ஏற்கனவே என்னுடைய காரில் ஒரு தடவை வரும் போது பெண்களை பத்தி தப்பு தப்பாக பேசினான். அப்போவே என்கிட்ட அடிவாங்கி ஹாஸ்பிடலில் இருந்தான். இப்போ திரும்பவும் சரியாகி வந்ததும் ஆரம்பித்துவிட்டான் போல. இவனை ஜெயிலில் போடுங்க" என சொல்கிறான் முத்து.
சிட்டி ரோகிணிக்கு போன் மூலம் பி.ஏவை போலீஸ் அரெஸ்ட் செய்ததை பற்றி சொல்கிறான். அதை பார்த்து ரோகிணி சந்தோஷப்படுகிறாள்.
விஜயாவும் பார்வதியும் பேசி கொண்டு இருக்க அந்த சமயத்தில் மீனாவை தேடி ஒருவர் வந்து பூ கேட்கிறார். மீனா இல்லை என சொன்னதும் அவளுடைய போன் நம்பரை கேட்க விஜயா அவரை திட்டி அனுப்பிவிடுகிறாள். மீனா வீட்டுக்கு வந்ததும் அவளை வாசப்படியிலேயே நிறுத்தி வைத்து அசிங்க படுத்துகிறாள் விஜயா. "நான் என்ன உன்கிட்ட வேலை பாக்குறேனா? வரவங்க போறவங்க எல்லாம் என்னை வேலை வாங்குறாங்க. உன்னோட நம்பரை கேக்குறாங்க?" என சொல்ல "உங்க கிட்ட என்னோட நம்பர் எல்லாம் இருக்குமா? நான் ஏழை வீடு பொண்ணு தானே" என வருத்தப்பட்டு சொல்கிறாள் மீனா.
விஜயா உடனே ரோகிணியிடம் "நான் சும்மா இருக்கேன்னு தானே எல்லாரும் என்னை வேலை வாங்குறாங்க. நாளையில் இருந்து நான் உன்னுடைய பார்லருக்கு வருகிறேன். இல்லாட்டி மனோஜ் ஷோரூம் போய் கல்லாவில் உட்கார்ந்து கொள்கிறேன்" என சொல்ல ஷாக்கான ரோகிணி விஜயா மூடை மாற்றுவதற்காக "நீங்க உங்க திறமையை வெளிப்படுத்தற மாதிரி ஏதாவது செய்யுங்க. உங்களுக்கு தான் டான்ஸ் நல்ல வரும் இல்லையா. அதனால டான்ஸ் ஸ்கூல் ஒன்னு ஆரம்பிக்கலாம்" என ஐடியா கொடுக்க விஜயா மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் ரோகிணி செய்கிறேன் என சொல்ல பார்வதி டான்ஸ் கிளாஸை தன்னுடைய வீட்டில் நடத்தி கொள்ள இடம் கொடுக்கிறாள்.
அடுத்த நாள் விஜயா பரதநாட்டிய உடையில் போட்டோஸ் எடுப்பதற்காக தயாராக வீட்டில் உள்ள அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்கிறாள். அனைவரும் பதட்டத்துடன் விஜயா எதற்காக வீட்டுக்கு வர விஜயாவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது தான் இன்றைய 'சிறகடிக்க ஆசை' எபிசோட் கதைக்களம்.