மேலும் அறிய
Siragadikka Aasai serial August 8 : மீனாவுக்கு வந்த சந்தேகம்: சிக்கலில் ரோகிணி! பரபரப்பில் சிறகடிக்க ஆசை சீரியல்
Siragadikka Aasai Today : ரோகிணி பிரசவ ஹாஸ்பிடலுக்கு வந்த விஷயம் மீனா மூலம் வீட்டுக்கு தெரிய வருகிறது. ரோகிணிக்கு வந்த புது பிரச்சினை. சிறகடிக்க ஆசையில் இன்று.

சிறகடிக்க ஆசை ஆகஸ்ட் 8
Source : you tube
Siragadikka Aasai serial August 8 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜுக்கு பேங்கில் இருந்து ப்ரீயாக 10 லட்சம் லிமிட் கொண்ட கிரெடிட் கார்டு வழங்குகிறோம் என சொல்லி ஒருவர் வந்து பேசுகிறார். மனோஜும் மிகவும் சந்தோஷமாக அதற்கு என்ன டாக்குமெண்ட் கொடுக்க வேண்டும் என விசாரிக்கிறார். ஆனால் இதில் ரோகிணிக்கு விருப்பமில்லை. வேண்டாம் என சொல்லியும் மனோஜ் கேட்காமல் கிரெடிட் கார்டுக்கு சம்மதம் சொல்லி விடுகிறான்.

ரோகிணிக்கு கிரிஷ் போன் செய்து "உன்னோடவே வந்துடுறேன் அம்மா" என்கிறான். "நான் உனக்காக இங்க ஸ்கூல் பார்த்துகிட்டு இருக்கேன். சீக்கிரமா கூட்டிட்டு வந்துடுறேன்" என சொல்கிறாள். அதனால் கிரிஷும் மிகவும் சந்தோஷமாகி விடுகிறான்.
ரோகிணியும் வித்யாவும் செக் அப் செய்வதற்காக மெட்டர்னிட்டி ஹாஸ்பிடல் ஒன்றுக்கு வருகிறார்கள்.
"வித்யா :இதெல்லாம் இப்போது தேவையா? ஏன் அவசர படுற. உனக்கு கல்யாணம் நடந்து இன்னும் ஒரு வருஷம் கூட முடியல
ரோகிணி :மனோஜ் என் கூட என்னைக்குமே இருக்கணும் அதுக்கு எங்களுக்கு குழந்தை ரொம்ப முக்கியம்" என்கிறாள்.

டாக்டர் ரோகிணியை உள்ளே அனைத்து செக் அப் செய்யும் போது முதல் டெலிவரி பற்றி விசாரிக்கிறார். இரண்டாவது குழந்தை பிறப்பதில் எந்த சிக்கலும் இல்லை. சில சமயம் அது பல காரணங்களால் லேட் ஆகலாம். அதனால் நீங்கள் கவலைப்படாமல் அமைதியாக இருங்கள் என அட்வைஸ் சேர்கிறார் டாக்டர்.
சீதாவும் மீனாவும் அதே ஹாஸ்பிடலுக்கு சீதாவின் வேலை விஷயமாக வருகிறார்கள். ஹாஸ்பிடலில் அக்கவுண்டண்ட் வேலைக்கு ஆள் தேவை என சீதா அப்ளை செய்து இருந்ததால் அவளை இன்டர்வியூவுக்காக வர சொல்லி இருக்கிறார்கள். மீனா சீதாவை நினைத்து மிகவும் பெருமை படுகிறாள். சீதாவுக்கு உள்ளே இருந்து அழைப்பு வருகிறது. அவள் உள்ளே செல்ல மீனா வெளியே காத்திருக்கிறாள். அப்போது மீனாவுக்கு மாலை கட்டும் ஆர்டர் ஒன்று வருகிறது. உடனே வர சொல்கிறார்கள்.
சீதாவுக்கு இன்னும் ஒரு ரவுண்ட் இருப்பதால் மீனா ஆர்டர் வந்தது பற்றி சொல்லிவிட்டு கிளம்புகிறாள். சீதா காத்திருக்கும் போது ரோகிணியை பில் கட்டும் இடத்தில் பார்த்துவிடுகிறாள். எதற்காக ரோகிணி அங்கே வந்து இருப்பாளா என யோசித்து கொண்டு இருக்கும் போது சீதாவை அடுத்த ரவுண்டுக்கு அழைக்கிறார்கள்.
வெளியே வந்ததும் சீதா தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை மீனாவுக்கு போன் பண்ணி சொல்கிறாள். அப்போது ரோகிணியை அங்கே பார்த்த விஷயத்தையும் சொல்கிறாள். அது குழந்தை பிறக்கும் ஹாஸ்பிடல் என்பதால் ஒருவேளை ரோகிணி மாசமா இருப்பாங்களோ என நினைத்து சந்தோஷப்படுகிறாள் மீனா.
"சீதா : உங்க மாமியாரோட சேர்ந்து அவங்க உன்னை அசிங்க படுத்துறாங்க. அவங்களுக்காக நீ இவ்வளவு சந்தோஷப்படுற?

மீனா : அதனால என்ன சீதா. அவங்களும் நம்ம குடும்பம் தானே. நம்ம வீட்ல ஒரு குழந்தை வர போகுதுன்னா அது நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான விஷயம் தானே" என்கிறாள்.
சீதாவுக்கு வேலை கிடைத்தது மற்றும் ரோகிணி கர்ப்பமாக இருப்பது என இது இராண்டுக்காகவும் மீனா வீட்டில் உள்ள அனைவரும் கேசரி செய்கிறாள்.
விஜயா : யாரோ பாஸ் பண்ணதுக்காக என்னோட வீட்ல இருக்க சர்க்கரை ரவை எல்லாத்தையும் காலி பண்ணுவியா?
மீனா : நான் ரோகிணிகாகவும் தான் சேர்த்து செய்தேன் அத்தை" என்கிறாள்.
அதை கேட்டு அனைவரும் குழப்பமாகிறார்கள். இது தான் இன்றைய கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement