Parijatham: ப்யூட்டி பார்லரில் ஸ்ரீஜாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ட்விஸ்ட் தரப்போகும் இசை - பாரிஜாதத்தில் இன்று
ஸ்ரீஜா பற்றிய உண்மை அறிந்த நிலையில், விஷாலுக்கு யாருடன் திருமணம் நடக்கிறது? என்ற பரபரப்பு பாரிஜாதத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா ரம்யாவை கொன்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இசையை மணமகளாக்கும் ஸ்ரீஜா:
அதாவது, மண்டபத்தில் ஸ்ரீஜாவை காணவில்லை என தேட தொடங்க சரியான நேரத்தில் ஸ்ரீஜா உள்ளே வந்து விடுகிறாள். பிறகு இசையும் மண்டபத்திற்கு வருகிறாள்.
ராகவ்வை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்ல இனிமே அந்த ஸ்ரீஜா கல்யாண பொண்ணா இருக்க கூடாது, நீங்களே மணப்பெண்ணாக மாறிடுங்க என்று சொல்ல, இசை அது எப்படி சரியா வரும்? என யோசிக்கிறாள்.
ஸ்ரீஜாவை மயங்க வைத்தது எப்படி?
இதனை தொடர்ந்து ஸ்ரீஜா மற்றும் வர்ஷினியை பியூட்டி பார்லர் சென்று வர சொல்கின்றனர், ராகவ் பியூட்டி பார்லருக்கு போன் செய்து ஒரு பொண்ணுக்கு மேக்கப் போடுற மாதிரி போட்டு மயங்க வைக்கணும் என்று சொல்கிறான்.
பிறகு ஸ்ரீஜாவும் வர்ஷினியும் மண்டபத்திற்கு வருகின்றனர், ராகவ் ஸ்ரீஜாவை கை காட்டி நான் சொன்ன பொண்ணு அவங்க தான் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















