Pandian Stores : 1000 எபிசோடுகளை தாண்டிய ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்‛ வெற்றி விழா கொண்டாட்டம்!
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு கோலாகலமான வெற்றிவிழா நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் ஒரு சீரியல் 1000 எபிசொட்களையும் கடந்தும் இன்றும் TRB ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் ஒரு சீரியல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" .
கேக் வெட்டி படப்பிடிப்பில் கொண்டாட்டம் :
நான்கு சகோதரர்களும் அவர்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை, பாச போராட்டங்களை மிகவும் நேர்த்தியாக நகர்த்தி வருகிறார் இயக்குனர் சிவ சேகர். இந்த தொடரின் 1000 வது எபிசோடுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் "வெற்றி விழா" கொண்டாட்டம்:
விஜய் தொலைக்காட்சியின் பிளாக் பஸ்டர் சீரியலான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரின் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு கோலாகலமான வெற்றிவிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. வரும் செப்டம்பர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு தங்களின் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி மற்றும் மறக்க முடியாத தருணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.
மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்துகொள்ளும் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. 😍 #PandianStores1000 #VetriVizha - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/EMdQVEvoLz
— Vijay Television (@vijaytelevision) September 23, 2022
குடும்பத்தின் தூண்கள்:
இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன், சரவணா விக்ரம், ஹேமா, காவ்யா அறிவுமணி, சாய் காயத்ரி, சாந்தி வில்லியம்ஸ், ரோசரி, டேவிட் சாலமன், கம்பம் மீனா, ஸ்ரீ வித்யா சங்கர், டேவிட் சாலமன் ராஜா, சுமங்கலி மற்றும் பலர் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.
சித்ராவின் நீங்காத நினைவுகள் :
முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வி.ஜே. சித்ராவின் நினைவு அலைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முழுவதும் நிறைந்து இருக்கும். இந்த வெற்றி விழாவில் சித்ராவின் நினைவுகள் பகிரப்படுவது நெகிழ்ச்சியான தருணம். இந்த தொடரின் நடிகர்கள் அனைவரும் அவர்களது உண்மையான அடையாளமே மறக்கும் படி சீரியல் கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களை ஏற்படுத்திய சிறந்த ப்ராஜெக்ட் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
View this post on Instagram
கூட்டு குடும்பத்தின் அழகு:
பாசத்தையும், கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையையும், ஈடு செய்ய முடியாத அன்பையும் வெளிக்காட்டும் இந்த தொடர் நிச்சயமாக ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அழிந்து வரும் கூட்டு குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் இந்த சீரியல் பலரது இல்லங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உங்களை தேடி உங்கள் இல்லங்களில்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000 வது எபிசோட் வெள்ளி விழா கொண்டாட்டம் ஆட்டம், பாட்டம், காமெடி, கலாட்டா என வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் நம் அனைவரது இல்லங்களையும் அலங்கரிக்க வருகிறது. நீங்கள் இந்த குடும்பத்தோடு இணைந்து இந்த அழகான தருணத்தை கொண்டாடுங்கள்.