Meenakshi Ponnunga: அம்மாவின் பிறந்த நாளை மறந்த வெற்றி.. சக்தி கொடுத்த சர்ப்ரைஸ்.. மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்று!
Meenakshi Ponnunga Sep.23: ரங்கநாயகிக்கு பிறந்தநாள் என்பதால் சரண்யா, செல்வமுருகன் அனைவரும் வாழ்த்து சொல்ல வெற்றி வாழ்த்து சொல்ல மறந்து விடுகிறான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரங்கநாயகி வீட்டிற்கு வெற்றி சக்தியும் வர , ரவுடியிடம் இருந்து காப்பாற்றாத வெற்றியை ரங்கநாயகி திட்டுகிறாள்.
ஏதேதோ சொல்லி வெற்றி சமாளிக்க ரங்கநாயகியை சமாளிக்க கோபத்துடன் போய் விடுகிறாள். இதனால் வெற்றி சோகமாக இருக்க சக்தி அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள். மறுநாள் ரங்கநாயகிக்கு பிறந்தநாள் என்பதால் சரண்யா, செல்வமுருகன் அனைவரும் வாழ்த்து சொல்ல வெற்றி வாழ்த்து சொல்ல மறந்து விடுகிறான்.
ரங்கநாயகி கோயிலுக்கு செல்ல வெளியே வர, வீட்டின் வெளியே பெரிய பிளக்ஸ் போர்டு வைத்து வாத்தியத்துடன் கோயில் குருக்கள் பிரசாதத்துடன் நின்று கொண்டிருக்க இதை பார்த்து ரங்கநாயகி சந்தோஷப்படுகிறாள். அங்கு வெற்றியும் வருகிறான்.
பிறகு இந்த ஏற்பாடெல்லாம் வெற்றிக்காக சக்தி தான் செய்தாள் என்பது ரங்கநாயகிக்கு தெரிய வர ரங்கநாயகி சக்தியை பாராட்டி செயின் அணிவிக்கிறார. இதைப் பார்த்து பூஜா கோபமடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.