Meenakshi Ponnunga: மீனாட்சியை காப்பாற்ற போராடும் மகள்கள்.. ஷக்திக்கு தெரிய உண்மை.. மீனாட்சி பொண்ணுங்க இன்று!
சங்கிலி மீனாட்சிக்கு விஷம் வைத்ததையும் அடியாட்கள் அடித்து பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னதையும் சக்தி காப்பாற்றியதையும் திடியனிடம் சொல்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி பிழைப்பது கஷ்டம் என சித்த வைத்தியர் சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, திடியன் சித்த வைத்திய சாலைக்கு வந்து மீனாட்சியை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். சங்கிலி மீனாட்சிக்கு விஷம் வைத்ததையும் அடியாட்கள் அடித்து பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னதையும் சக்தி காப்பாற்றியதையும் திடியனிடம் சொல்கின்றனர்.
இங்கே ரங்கநாயகியின் விழாவில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றியது ரங்கநாயகிக்கு தெரிந்து விழா நின்று போனதையும் திடியன் சொல்கிறான். பிறகு மீனாட்சி கண் முழிக்க வேண்டும் என்று இரவெல்லாம் தூங்காமல் பேச்சு கொடுத்துக்கொண்டு மூன்று பெண்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மீனாட்சிக்காக பக்தி பாடல்களை பாடுகிறார்கள்.
மறுபக்கம், புஷ்பா நீதிமணியிடம் நல்ல முறையில் பேசி சங்கலியை வைத்து நீதிமணிக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவனை போதையாக்குகிறாள். புஷ்பா ரவுடிக்கு போன் செய்து மீனாட்சி உயிருடன் இருக்கிறாளா இறந்துவிட்டாளா என்று கேட்க, சித்த வைத்திய சாலையில் ரவுடி மீனாட்சியை கொலை செய்ய முயற்சிக்க, அங்கு வந்த சக்தி அவனை தடுத்து நிறுத்தி அந்த ரவுடியின் கையை முறுக்கிஅவன் கையில் இருக்கும் செல்போனை பிடுங்குகிறாள்.
அதில் புஷ்பா மீனாட்சி இந்நேரம் இறந்திருக்க வேண்டுமே என்று சொன்னதையும் நீதிமணி குடித்துவிட்டு உளறிக் கொண்டு இருக்கும் சத்தத்தையும் போனில் கேட்டு சக்தி கோவத்துடன் செல்போனை தூக்கிப்போட்டு உடைக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Marvel What If Series: மார்வெல் ரசிகர்கள் காட்டில் மழை.. வாட் இஃப் சீரிஸ் சீசன் 2 - 9 நாட்களில் 9 எபிசோட்கள் : தரமான டிரெய்லர்