மகாநதி சீரியலை விட்டு திடீர் என வெளியேறிய முக்கிய பிரபலம்! அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான 'மகாநதி' சீரியலில் இருந்து, முக்கிய பிரபலம் தற்போது வெளியேறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில், கொஞ்சம் கூட சுரஸ்யத்திற்கு குறைவில்லாமல்... பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மகாநதி'. திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு 5 நாட்கள் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை, இயக்குனர் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்டென்ட் இயக்கி வருகிறார்.
2023-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர், சுமார் 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், லீடு ரோலில் தற்போது 3 நாயகிகள் மற்றும் 3 கதாநாயகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த மூன்று பேரில் பலரது மனதையும் அழகாலும் , தன்னுடைய துறுதுறு பேச்சாலும் கொள்ளை கொண்டவர் லக்ஷ்மி ப்ரியா. இவருக்கு ஜோடியாக சுமிநாதன் நடித்து வருகிறார் . 'விஜய் - காவேரி' கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர்களுக்கு , தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர்களை தொடர்ந்து கங்கா கதாபாத்திரத்தில், தாரணி ஹெப்சிபா மற்றும் குமரன் கதாபாத்திரத்தில், கம்ருதீன் நடித்து வருகிறார். இவர்கள் இடையே நடக்கும் காதல் மற்றும் மோதல் காட்சிகளை பார்த்து ரசிக்கும் பல ரசிகர்கள் உள்ளார். இவர்களை தொடர்ந்து நடித்து வரும் மற்றொரு ஜோடி, யமுனா மற்றும் நிவின். யமுனாவாக ஆதிரை சௌந்தர் ராஜனும், நிவின் கதாபாத்திரத்தின் ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இவர்களை தவிர சுஜாதா சிவகுமார், சரவணன், பேபி காவியா, பங்கஜம், வைஷாலி திலகா உள்ளிட்ட பலர் நடித்தனர். ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் மற்ற சீரியல்களுக்கு டப் கொடுத்து வரும் இந்த தொடரில் இருந்து 3 கதாநாயகிகளில் ஒருவர் விலகி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாரும் இல்ல நிவினுக்கு ஜோடியாக யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வரும், அதிதி சௌந்தர்ராஜன் தான். வேறு தொலைக்காட்சி தொடர் வாய்ப்பு காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது. இவரது வெளியேற்றம் இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரைஸ்கர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















