மேலும் அறிய

Maari: விவாகரத்து பேப்பரில் கையெழுத்துப்போட போன சூர்யா.. காத்திருந்த அதிர்ச்சி...மாரி சீரியலில் நடந்த ட்விஸ்ட்!

சூர்யாவை கையெழுத்து போட சொல்லிக்கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்று மாரி பெயருக்கு வருகிறது. ஹாசினி தூங்கி கொண்டிருக்கும் நிலையில் மாரியை எழுப்பி கீழே அழைத்து வருகிறார்.

மாரி சீரியலில் மாரியின் விரல் ரேகைப்பதிவு கொண்ட விவாகரத்து பத்திரத்தை கண்டு சூர்யா அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் சூர்யாவை திருமணம் செய்யக்கூடிய பெண்ணான ஜாஸ்மினிடம் விவாகரத்து பத்திரத்தில் மாரியை கையெழுத்திட வைக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என தாரா சொல்கிறார். ஆனால் இதற்கு மாரி மறுக்க, அவருக்கு மயக்கம் மருந்து கொடுத்து தூங்க வைத்து அவரிடமிருந்து ஜாஸ்மின் கைநாட்டு வாங்கும் காட்சிகள் இடம் பெற்றது. 

இந்நிலையில் இன்றைய எபிசோடில் மாரி கையெழுத்து போட்ட பத்திரத்தை தாராவிடம் ஜாஸ்மின் கொடுக்க அவர் சந்தோஷமடைகிறார். நாளைக்கு சூர்யா வந்தவுடன் இந்த பத்திரத்தை காட்டி கையெழுத்தை வாங்கி விட்டால் போதும் மாரியை இந்த வீட்டில் அனுப்பி விடலாம் என்று தாரா பேசுகிறார். மறுநாள் காலை சூர்யா வரவும் மாரி கையெழுத்து போட்ட விவாகரத்து பத்திரத்தை கொடுத்து தாரா அதிர்ச்சி அளிக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

மாரி  கைநாட்டா இது என்று சூர்யா கேட்க, ஆமாம் ஜாஸ்மின் தான் மாரியிடம் கை நாட்டு வாங்கி கொடுத்தாள் என்று தாரா சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் சூர்யாவை கையெழுத்து போட சொல்லிக்கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்று மாரி பெயருக்கு வருகிறது. ஹாசினி மாரியை எழுப்பி கீழே அழைத்து வருகிறார். அப்போது மாரி அனைவர் முன்னாலும்  பார்சலை வாங்கும்போது கையெழுத்து போட்டு  அனைவரும் அதிர்ச்சி கொடுக்கிறார். 

உடனே சூர்யா மாரியிடம் உனக்கு கையெழுத்து போட தெரியுமா என்று கேட்க, ஆம் என அவர் தெரிவிக்கிறார். அப்போ இந்த விவாகரத்து பத்திரத்தில் நீ கைநாட்டு வக்கலையா என்று கேட்க உண்மை தெரிய வருகிறது. இதனால் சூர்யா கோபத்தில்  ஜாஸ்மீனை திட்டி விவாகரத்து பத்திரத்தை கிழித்து போடுகிறார். இதனையடுத்து மாரியிடம் மேலே ரூமில் இருக்கும்போது சூர்யா,  உனக்கு எழுத தெரியுமா என்று கேட்கிறார். 

அப்படியென்றால் எழுதிக்காட்டு என்று சொல்ல மாரி நோட்டில் சூர்யா மாரி... சூர்யா மாரி என்று எழுதுகிறார். ஸ்ரீராமஜெயம் என்று எழுதப்போவதாக சொல்லிவிட்டு என் பெயரை எழுதி வைத்திருக்காய் என்று அதனைப் பார்த்து சூர்யா கேட்க,  என்ன பொருத்தவரைக்கும் நீங்க தான் ஸ்ரீ ராமர் என்று சொல்ல சூர்யா ஃபீல் ஆகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. இதனால் மாரி சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
Chennai Power Cut: செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் 9 இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா? - நோட் பண்ணுங்க!
Chennai Power Cut: செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் 9 இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா? - நோட் பண்ணுங்க!
TVK vs ADMK:
TVK vs ADMK: "துரோகம்.. சுயநலம்.. முதுகில் குத்தியது.." எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து தள்ளிய தவெக
AIADMK: எங்கள் கூட்டணியைப் பற்றி பேச தகுதி இருக்கா?.. தவெகவை சீண்டிய அதிமுக.. காரசார வார்த்தை மோதல்!
AIADMK: எங்கள் கூட்டணியைப் பற்றி பேச தகுதி இருக்கா?.. தவெகவை சீண்டிய அதிமுக.. காரசார வார்த்தை மோதல்!
Embed widget