Koomapatti Thangapandi: ”ஏங்க கூமாபட்டி வாங்க” விபத்தில் சிக்கிய கூமாபட்டி தங்கபாண்டி! என்ன ஆச்சு? உச்சக்கட்ட அதிர்ச்சி!
Koomapatti Thangapandi: கூமாபட்டி புகழ் தங்கபாண்டி பேருந்து விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Koomapatti Thangapandi: ஏங்க கூமாபட்டி வாங்க புகழ் கூமாபட்டி தங்கபாண்டி பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கூமாபட்டி தங்கபாண்டி:
சமூக வலைதளங்களில் சிலர் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரே நாளில் பிரபலமடைந்து விடுவார்கள். அப்படி பிரபலமானவர் தான் கூமாபட்டி தங்கபாண்டி. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் தான் கூமாபட்டி. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கே இந்த ஊரின் பெருமை தெரியாது. ஆனால் இன்றைக்கு இந்த ஊர் தமிழ்நாடு முழுவதும் தெரிந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் தங்கபாண்டி தான். தனது ஊரை மையப்படுத்தி ”ஏங்க,கூமாபட்டி வாங்க”, “சொர்க்கம்ங்க எங்க ஊர்” என்று பேசி இவர் சமூக வலைதளங்களில் போட்ட வீடியோக்கள் எல்லாம் வைரலானது. இதன் மூலம் இவரது ஊரான கூமாபட்டி பிரபலமானது. தமிழ்நாடு அரசு இவரது ஊரை சுற்றுலாதளமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக 10 கோடி ரூபாயை ஒதுக்கியது.
தனியார் நிகழ்ச்சி:
இப்படி பிரபலமடைந்த தங்கபாண்டி இதன் தொடர்ச்சியாக நகைக்கடை, துணிக்கடை விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவ்வாறாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது அந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாந்தினிக்கு ஜோடியாக இடம்பெற்றுள்ளார். கூமாபட்டி தங்கபாண்டியும் சாந்தினியும் போடும் குத்தாட்டத்தை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பேருந்து விபத்து:
இந்த நிலையில், நன்றாக போய்க்கொண்டிருந்த கூமாபட்டி தங்கபாண்டி யார் கண்ணு பட்டுச்சோ தெரியலயே என்பதை போல் பேருந்து விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இன்று தனியார் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை முடித்து விட்டு தனது சொந்த ஊரான கூமாபட்டிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார் தங்கபாண்டி. அப்போது, பேருந்து ஓட்டுனர் தீடீரென ப்ரோக் போட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது தங்கப்பாண்டியின் தோள் பட்டை கதவில் வேகமாக மோதியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவரது அவரது வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிந்துள்ளது. பின்னர், தங்கபாண்டியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், ஏன், இவ்வளவு வேகமா ஓட்றீங்க என்று கேட்டதற்கு பேருந்து ஓட்டுனர் தன்னை திட்டியாதகவும் குற்றம் சாட்டியுள்ளார் கூமாபட்டி தங்கபாண்டி. தற்போது இந்த விபத்து குறித்து தங்கபாண்டி கொடுத்த புகாரின் போரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.





















