புருஷனை பிரிய ஓகே சொன்ன ரேவதி.. குடும்பத்தை கெடுத்த சந்தோஷத்தில் சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி கேசை வாபஸ் வாங்கி, கார்த்திக்கை வெளியே எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கை பிரிக்க சம்மதித்த ரேவதி:
அதாவது கார்த்திக் உள்ளே வந்த கையோடு பஞ்சாயத்தை கூட்டம் நடத்தி சாமுண்டீஸ்வரி கார்த்திக் ரேவதியை காசு வெட்டி போட்டு பிரிக்கப் போவதாக சொல்கிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பரமேஸ்வரி இரண்டாம் சாமுண்டீஸ்வரி என்று சத்தம் போடுகிறாள்.
பிறகு பஞ்சாயத்துக்குச் சென்ற ரேவதி எங்க அம்மாவோட முடிவு என்னவோ அதுதான் என்னுடைய முடிவு என்ன அதிர்ச்சி கொடுக்கிறாள். பிறகு பூசாரியை வரவைத்து காசு வெட்டி போட்டு இனி கார்த்திக்கும் ரேவதிக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என பிரிக்கப்படுகின்றனர்.
சந்தோஷத்தில் சந்திரகலா:
அடுத்ததாக வீட்டுக்கு வந்ததும் சந்திரகலா என்னாச்சு என்று கேட்க, பஞ்சாயத்தில் காசு வெட்டி கார்த்திக் ரேவதியை பிரித்த விஷயத்தை சொல்ல அவள் சந்தோஷம் அடைகிறாள். மறுபக்கம் பரமேஸ்வரி கார்த்திக், வீட்டுக்கு வந்து துர்காவிடம் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறாள்.
கார்த்திக் எனக்கு என்னமோ ரேவதி இதை முழுமனதாக செஞ்சா மாதிரி தோணுல. அவர் என்ன வெளியே எடுக்கிறதுக்காகத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கா. எங்க ரெண்டு பேரையும் யாராலும் பிரிக்க முடியாது. என்னைக்கும் அவதான் என் பொண்டாட்டி என சொல்கிறான்.
ரேவதி தற்கொலை முயற்சி:
மறுபக்கம் ரேவதி பஞ்சாயத்தில் நடந்தது நினைத்து வருத்தமாகி தற்கொலைக்கு முயல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















