Karthigai Deepam: கார்த்தியிடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட் - கார்த்திகை தீபம் இன்று!
Karthigai Deepam Sep 26: ஜானகி தீபாவின் காலில் கொலுசை காணவில்லை என சத்தம் போட, கார்த்திக் அங்கு வந்து விட மைதிலி லைட்டை ஆஃப் செய்து நிலைமையை சமாளிக்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா தீபாவுக்கு போன் செய்து “நாளைக்கு உன்னைப் பாராட்ட ஊருக்கு கிளம்பி வரேன்” என்று சொல்லி மிரட்டிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஜானகி தீபாவின் காலில் கொலுசை காணவில்லை என சத்தம் போட, கார்த்திக் அங்கு வந்து விட மைதிலி லைட்டை ஆஃப் செய்து நிலைமையை சமாளிக்கிறாள். கார்த்திக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என சைகை காட்டி ஜானகியையும் அமைதியாக இருக்க சொல்கிறாள்.
அடுத்ததாக ஐஸ்வர்யா தீபா வீட்டுக்கு வந்து தீபாவிடம் நீ போய் முருகன் சிலை முன்னாடி உட்கார்ந்து ஒரு கீர்த்தனை பாடு என சொல்ல, தீபா வேறு வழி இல்லாமல் இல்லாமல் கீர்த்தனை பாட முதல் எபிசோடில் கார்த்தி கேட்டு மயங்கிய குரல் என்பது தெரிய வருகிறது.
பிறகு ஐஸ்வர்யா “பாத்தீங்களா.. இவ்வளவு நாளா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்கா” என்று சொல்ல, “அன்னைக்கு பாடுனது நீங்கதானா” என மிரட்டுவது போல கேள்வி கேட்டு, எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் என சொல்ல, தீபா காதலுடன் கார்த்தியை கட்டிக் கொள்கிறாள்.
பிறகு கார்த்திக், “நீங்க பண்ணதிலேயே நல்ல விஷயம் இதுதான். எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைத்து விட்டீர்கள்” என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். பிறகுதான் இது அத்தனையும் ஐஸ்வர்யா கண்ட கனவு எனத் தெரிய வருகிறது.
எக்காரணத்தைக் கொண்டும் தீபாவுக்கு நல்லது மட்டும் செய்துவிடக் கூடாது என நினைக்கும் ஐஸ்வர்யா, “இந்த வழியாக வந்தேன், உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு இங்க வந்தேன்” என்று சொல்லி சமாளித்து வெளியே கிளம்புகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.