Karthigai Deepam: பொசசிவ்வான தீபா.. வார்னிங் கொடுத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
Karthigai Deepam Sep 20: திருவிழாவில் இரண்டு பெண்கள் கார்த்திக்கை சைட் அடித்த அவனோடு செல்ஃபி எடுக்க, அதை பார்த்த தீபா கடுப்பாகி கார்த்திக்கை அப்பா கூப்பிடுவதாகச் சொல்லி அனுப்பி வைத்துவிடுகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் (Karthigai Deepam).
இந்த சீரியல் நேற்றைய எபிசோட்டில் குணா ஆசிட் கலந்த பானையை உறியடிக்க வைக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, தீபா உறியடிக்க, எதுவும் ஆகாமல் இருக்க, பிறகு அந்த பானையில் ஆசிட் இல்லை எனத் தெரிய வந்தது.
குணா தன்னுடைய அடியாட்களிடம் விசாரித்துக் கொண்டிருக்க கார்த்திக், பானையை மாற்றி வைத்த விஷயத்தை சொல்லி அவர்களை எச்சரிக்கிறார். இதையெல்லாம் மறைந்திருந்து ஒட்டுக் கேட்கும் ஐஸ்வர்யா, பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார்.
அடுத்ததாக திருவிழாவில் இரண்டு பெண்கள் கார்த்திக்கை சைட் அடித்த அவனோடு செல்ஃபி எடுக்க, அதை பார்த்த தீபா கடுப்பாகி கார்த்திக்கை அப்பா கூப்பிடுவதாகச் சொல்லி அனுப்பி வைத்துவிடுகிறாள், பின் அந்த பெண்களிடம் கார்த்தியோட பொண்டாட்டி பெரிய பஜாரி என்று பேசி மிரட்டி அந்த செல்பி போட்டோவை டெலிட் செய்ய வைக்கிறாள்.
அதனைத் தொடர்ந்து கார்த்தி வீட்டுக்கு வந்ததும் தீபா அவனுக்கு திருஷ்டி கழிக்க கற்பூர ஆரத்தி காட்ட, மைதிலி அதைப் பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.