Karthigai Deepam July 26: தீபாவைத் தடுத்து நிறுத்திய கார்த்திக்... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்தியின் பிறந்த நாளுக்கு கேக் கட்டிங் தொடங்க தீபா அருகில் செல்ல முடியாமல், வாழ்த்து சொல்ல முடியாமல் ஏக்கமாக பார்க்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை கீழே கூட்டி வர ரூபாஸ்ரீ அதிர்ச்சி அடைந்தாள்.
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் தீபா திரும்பவும் ரூமுக்கு கிளம்ப, தடுத்து நிறுத்தும் கார்த்தி “கச்சேரி முடியும் வரை நீ இங்க தான் இருக்க வேண்டும்” என உட்கார வைக்க, ரூபாஸ்ரீ எப்படி பாடுவது என தெரியாமல் தவிக்கிறாள். இதற்கிடையில் ஐஸ்வர்யாவும் மைதிலியும் சந்தித்து கொள்ள இருவருக்கும் வாக்குவாதம் உருவாகிறது.
இதனைத் தொடர்ந்து தீபா தன்னுடைய தம்பி இனியனை கூப்பிட்டு மேலே போய் யாருக்கும் தெரியாமல் மைக் எடுத்துட்டு வா என்று அனுப்பி வைக்க, அவனும் எடுத்து வந்து கொடுக்க தீபா கையில் இருக்கும் பொக்கேக்குள் மைக்கை சொருகி தன்னுடைய அம்மாவுடன் பேசுவது போல பாட்டு பாட, எல்லாரும் ரூபாஸ்ரீ குரல் ரொம்ப நல்லா இருக்கு என்று வியந்து பாராட்டுகின்றனர்.
பிறகு கார்த்தியின் பிறந்த நாளுக்கு கேக் கட்டிங் தொடங்க தீபா அருகில் செல்ல முடியாமல், வாழ்த்து சொல்ல முடியாமல் ஏக்கமாக பார்க்கிறாள். அவள் சோகமாக இருப்பதாய் பார்த்து ஜானகி, தர்மலிங்கம் ஆகியோர் என்னாச்சு என்று விசாரிக்க அபிராமி கார்த்தியின் பக்கத்தில் வர கூடாது என்று போட்ட கண்டிஷன் பற்றி சொல்லி வருந்துகிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.