Karthigai Deepam: வெளிவந்த உண்மை.. சிக்கிய பல்லவி.. கார்த்திக்கு அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!
மீனாட்சி கார்த்திக்குக்கு தெரிந்த ஒரு போலீசுக்கு போன் செய்து பல்லவி குறித்து சொல்லி உதவி கேட்கிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திக்கை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியால் சண்டையிட, அவன் “நாளைக்கு ரெக்கார்டிங் முடிந்ததும் பல்லவி கிளம்பிடுவாங்க” என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, “ரூபஸ்ரீ பல்லவிக்கு போன் செய்து என்ன நடக்குது, என்னாச்சு?” என்று விசாரிக்கும் போது பல்லவி இங்கே நடக்கும் விஷயங்களை சொல்ல, அவள் சரி போற வரைக்கும் போகட்டும் பார்த்துக்கலாம் என்று சொல்லி போனை வைக்க, மீனாட்சி பல்லவி பேசுவதைப் பார்த்து “ஏதோ தப்பா இருக்கே..” என்று சந்தேகமடைகிறாள். அதே நேரம் பல்லவியும் மீனாட்சியை பார்த்து விட இவங்களுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதறுகிறாள்.
அடுத்து மீனாட்சி கார்த்திக்குக்கு தெரிந்த ஒரு போலீசுக்கு போன் செய்து பல்லவி குறித்து சொல்லி உதவி கேட்கிறாள். அடுத்து மறுநாள் ரெக்கார்டிங்கிற்காக பல்லவி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது மீனாட்சி பேசிய போலீஸ் ஆட்டோவை நிறுத்தி “நீங்க யார்?” என்று விசாரிக்க, பல்லவி என்று பெயரை சொல்ல அடையாள அட்டையைக் காட்ட சொல்ல பல்லவி அதிர்ச்சி அடைகிறாள்.
போலீஸ் தொடர்ந்து அவளிடம் “ஐடி கார்ட் காட்டினால் தான் விட முடியும்” என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அங்கு வரும் கார்த்திக் “எனக்கு தெரிந்த பொண்ணு தான்” என்று சொல்லி பல்லவியை அழைத்து செல்ல தீபாவும் ஆபிஸ் வந்து விடுகிறாள்.
ரெக்கார்ட்டிங்கிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க பல்லவியை பாட தயாராக சொல்ல, அவள் எப்பவும் “கோயிலுக்கு போயிட்டு வந்து தான் பாடுவேன், கோயிலுக்கு மட்டும் போய்ட்டு வந்துடுறேன்” என்று அனுமதி கேட்க, கார்த்திக் வேறு வழியில்லாமல் “சீக்கிரம் வந்துடுங்க” என்று அனுப்பி வைக்க தீபாவும் கூட செல்கிறாள். கோயிலில் தீபா இந்த ரெக்கார்டிங் நல்லபடியாக நடக்கணும் என்று வேண்ட பல்லவி “நான் மாட்டிக்க கூடாது” என்று வேண்டுகிறாள்.
பிறகு தீபா “இது கார்த்திக் சாருக்கு முக்கியமான விஷயம், நல்லா பாடணும்” என்று சொல்லி அழைத்து வர, மீண்டும் பல்லவி தொண்டை சரியில்லை என்றும் கொஞ்சம் நேரம் கழித்து பாடுவதாகவும் நேரத்தைக் கடத்துகிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் போய் பாடலாமா என்று கேட்க, ஓகே என சொல்லி பாட ஆரம்பிக்க, கார்த்தி இந்தக் குரலை உன்னிப்பாக கேட்,க இது அவன் கேட்ட ஒரிஜினல் குரல் என்பதை கண்டுபித்து ரெக்கார்டிங்கை நிறுத்தி ‘யார் நீ’ என்று விசாரிக்கிறான். அவள் “நான் பல்லவி கிடையாது, ரூபாஸ்ரீ தான் பாடினால் பணம் கிடைக்கும்” என அனுப்பி வைத்ததாக சொல்ல, கார்த்திக் அவளைத் திட்டி அனுப்புகிறான்.
என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக வெளியே கிளம்ப, தீபா பின்தொடர்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.