Karthigai Deepam Aug 23: மாலில் அவமானப்படும் தர்மலிங்கம் குடும்பம்.. அதிரடி காட்டிய கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
தீபாவுக்கு புடவை எடுக்க கார்த்திக்கும் தீபாவும் செல்ல, கார்த்திக் “உங்களுக்கு பிடித்த மாதிரி புடவை எடுத்துக்கங்க” என்று சொல்ல, தீபா “நீங்களே தேர்ந்தெடுங்க” என்று ஆசையாக சொல்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாப்பிங் செய்வதற்காக எல்லாரும் மாலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
எல்லாரும் மாலில் வந்து இறங்க ஐஸ்வர்யாவும் ஆட்டோவில் வந்து இறங்கி ஒளிந்து கொள்கிறாள். கார்த்திக் எல்லாரையும் உள்ளே அழைக்க தர்மலிங்கம், “ஒரு போன் பேசணும், பேசிட்டு வரேன் நீங்க போங்க” என்று சொல்ல, கார்த்திக் “சரி அவர் போன் பேசிட்டு வரட்டும், நீங்க வாங்க” என்று மற்றவர்களை கூப்பிடுகிறான்.
“நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க பின்னாடியே நாங்க வரோம்” என்று சொல்ல தீபாவும் கார்த்திக்கும் உள்ளே செல்கின்றனர். தீபா எஸ்கலேட்டரில் செல்ல ஆசைப்பட கார்த்திக் அழைத்து செல்ல, அவள் அதில் ஏற பயப்பட கார்த்திக் தீபாவின் கையை பிடித்து மேலே அழைக்க இதைப் பார்த்து ஐஸ்வர்யா கடுப்பாகிறாள்.
உடனே அங்கிருக்கும் செக்கியூரிட்டியிடம் தர்மலிங்கம் குடும்பத்தைக் காட்டி, “இவங்க எல்லாரும் கொள்ளைக்கார கும்பல், பொருட்களை திருட வந்திருக்காங்க, நான் ஒரு மாலுக்கு சென்றிருந்த போது அங்கேயும் வந்திருந்தாங்க” என்று சொல்ல செக்யூரிட்டி இவர்களை பின் தொடர்ந்து செல்கிறான்.
அப்போது இனியன் ஒரு கேமில் விளையாட உட்கார, செக்யூரிட்டி அவனை பிடித்து தள்ளி “உங்ககிட்ட பணம் இருக்கா? நீங்க கொள்ளையடிக்க வந்த கும்பல் தானே” என்று சொல்லி பேக்கை பரிசோதனை செய்து அவமானப்படுத்த, இதைப் பார்த்த கார்த்திக் செக்யூரிட்டியை திட்டி இவர்கள் எல்லாரையும் உள்ளே அழைத்துச் செல்கிறான்.
பிறகு தீபாவுக்கு புடவை எடுக்க கார்த்திக்கும் தீபாவும் செல்ல, கார்த்திக் “உங்களுக்கு பிடித்த மாதிரி புடவை எடுத்துக்கங்க” என்று சொல்ல, தீபா “நீங்களே தேர்ந்தெடுங்க” என்று ஆசையாக சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.