Jayam Ravi: ராஜூ வீட்ல பார்டியில் பங்கேற்ற அருள்மொழி வர்மன்... போர்களமாகும் செட்!
"பொன்னியின் செல்வன்" அருள் மொழி வர்மன் கலந்து கொண்டு கலக்கிய "ராஜு வூட்ல பார்ட்டி" நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த வாரமும் ஒளிபரப்பாகும்.
விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "ராஜு வூட்ல பார்ட்டி" நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கி வருகிறார்கள். நகைச்சுவை, கலாட்டா, குசும்பு இவற்றுடன் சேர்த்து பல அனுபவங்களை, நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் பிரபலங்கள்.
ராஜ சாம்ராஜ்யம் போல அமைக்கப்பட்ட செட் :
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று "பொன்னியின் செல்வன்" படத்தின் முக்கிய கதாபாத்திரமான அருள்மொழி வர்மன் (ஜெயம்ரவி) பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார். பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். நேற்று நிகழ்ச்சியின் செட் முழுவதும் விழா கோலம் போல சோழ சாம்ராஜ்யத்தின் தீம் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் பிரியங்கா, ராஜு, சுட்டி அரவிந்த் உள்ளிட்டோரும் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்றனர். பிரியங்கா இம்சை அரசன் 23ம் புலிகேசி போலவும், ராஜு சந்திரமுகி ரஜினி வேடத்திலும், சுட்டி அரவிந்த் சிவகாமியின் தோற்றத்திலும் தொகுத்து வழங்கினார். வழக்கம் போல் மதுரை முத்து கடி ஜோக்குகளால் அனைவரையும் குதூகலப்படுத்தினர்.
பல வித்தையை கத்து வச்சுருக்காரு பா 😃
— Vijay Television (@vijaytelevision) October 3, 2022
ராஜு வூட்ல பார்ட்டி - ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajuVootlaParty #VijayTelevision pic.twitter.com/BJeFmvrizd
அடுத்த வாரம் தொடரும்:
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த கலகலப்பு வரும் வாரமும் தொடரப்போவது சின்னத்திரை ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. ராமர் நேற்று நிகழ்ச்சியில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்து ஸ்பெஷல் விருந்தினரான ஜெயம் ரவியை இமிடேட் செய்து வந்தார். ஜெயம் ரவியுடன் ராமர் பரதம் ஆடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஷோவின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சுனிதா ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க உள்ளார். சோழ நாடு தளபதியிடம் இருந்து பாதுகாப்பு கலையை கற்று கொள்ள ஆசைப்படும் சுனிதாவிற்கு வாள் சண்டை மற்றும் சிலம்பம் பயிற்சியளிக்கிறார் ஜெயம் ரவி. எல்லா வித்தைகளையும் கைக்குள் அடக்கி வைத்து இருக்கிறார் பா இந்த மனுஷன். மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் சுனிதா இந்த ஷூட்டிங் ரொம்ப சூப்பரா இருக்குப்பா என்கிறார். மிகவும் கலகலப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த வாரத்தின் "ராஜு வூட்ல பார்ட்டி" நிகழ்ச்சியை காண தவறாதீர்கள்.
Luv You lot ♥
— Prabhakar (@itz_Prabhaa) October 2, 2022
Miss You lot This Show 💔#RajuVootlaParty #VijayTelevision #RajuJeyaMohan pic.twitter.com/IpZ2xaPjHt