மேலும் அறிய

Ethirneechal : நான் இல்லாம குடும்பமா? குணசேகரனுக்கு எதிரான போர்.. எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : காதுகுத்து விழா எப்படி நடக்கிறது என்பதை பார்க்கலாம் என ஆணவமாக குணசேகரன் பேச அவரை ஏத்தி விடுகிறான் கரிகாலன். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

Ethirneechal Today : சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் கடந்த வாரத்தில் ஜனனி தன்னுடைய பயணத்தை வேலையில் சேர்ந்ததன் மூலம் தொடங்குகிறாள். கரிகாலன் வந்து குணசேகரனுடன் சேர்கிறான். வீட்டில் இருப்பவர்கள் அவனை எதிர்த்தாலும் குணசேகரனனின் ஆதரவோடு நக்கலும் நையாண்டியுமாக திமிராக சுற்றி வருகிறான்.

தாராவின் காதுகுத்து விழாவுக்கான பத்திரிகைகளை உறவினர்களுக்கு வைப்பதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் குடும்பத்தினர். குணசேகரன் பெயர் பத்திரிகையில் இல்லை என்பதால் அதை பார்த்து கேள்வி கேட்டவரிடம் கொந்தளிக்கிறான் கதிர்.

Ethirneechal : நான் இல்லாம குடும்பமா? குணசேகரனுக்கு எதிரான போர்.. எதிர்நீச்சலில் இன்று

தர்ஷினியை ஜீவானந்தம் அழைத்து வந்து ஈஸ்வரியிடம் ஒப்படைக்கிறார். தர்ஷினி மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவளுக்கு சிறிது காலம் அவகாசம் கொடுத்து அதற்கு பிறகு போட்டியில் கலந்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என ஈஸ்வரியுடன் தர்ஷினியை அனுப்பி வைக்கிறார் ஜீவானந்தம்.

தர்ஷினி வீட்டுக்கு வந்ததை பார்த்து ஆத்திரமடைந்த குணசேகரன் அவளை அவமானப்படுத்தி பேச டென்ஷனான தர்ஷினி குணசேகரனை எதிர்த்து துணிச்சலாக சவால் விடுகிறாள். அதை பார்த்த பெண்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது.

தர்ஷினி அம்மாவிடமும் சித்திகளிடமும் இந்த வீட்டில் இருந்தால் முன்னேற முடியாது அதனால் உறுதியாக ஒரு முடிவு எடுத்து வீட்டில் இருந்து வெளியே  சென்று சாதிக்க சொல்லி அட்வைஸ் கொடுத்து கொண்டு இருக்கிறாள். தாராவின் பங்க்ஷன் முடிந்த பிறகு நல்ல ஒரு முடிவை எடுக்க சொல்லி சொல்கிறாள்.

தாராவுக்கு சீர் செய்ய எதுவுமே இல்லை என ஞானம் வருத்தப்பட்டு கொண்டு இருக்க ரேணுகா வந்து அவனை சமாதானம் செய்து வைக்கிறாள். ஐஸ்வர்யாவின் சங்கிலியை இப்போதைக்கு தாராவுக்கு போட்டுவிட்டு சமாளிக்கலாம் என ஐடியா கொடுக்கிறாள். முதலில் தயங்கிய ஞானம் பின்னர் சம்மதம் சொல்கிறான்.  

ஜனனி தன்னுடைய ஆபீஸில் இருக்கும் வி.கே செய்யும் கோமாளித்தனத்தை பற்றி சொல்ல சொல்ல சக்தியின் முகமே மாறிவிடுகிறது. இது தான் கடந்த வாரத்திற்கான கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 20) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அனைவரும் காதுகுத்து விழாவுக்கு தயாராகிறார்கள். அங்கே வந்த விசாலாட்சி அம்மா ஏதோ சொல்ல ரேணுகா அவரை பார்த்து கேள்வி கேட்கிறாள். "பேத்தி தானே அது. இந்த நல்ல நாளில் நல்ல சொல்லு சொல்ல கூடாதா?" என்கிறாள். "எனக்கு எந்த பேத்தியும் இல்ல" என விசாலாட்சி அம்மா சொல்ல நந்தினியின் முகமே மாறிவிடுகிறது.

Ethirneechal : நான் இல்லாம குடும்பமா? குணசேகரனுக்கு எதிரான போர்.. எதிர்நீச்சலில் இன்று

கரிகாலன் குணசேகரனை ஏத்தி விட்டுக்கொண்டு இருக்கிறான். "இந்த பணத்தை எல்லாம் கலெக்ட் பண்ணி பிசினஸ் பண்ணி பெரிய ஆளா ஆயிட்டாங்கனா?" என கிளறிவிடுகிறான். "குணசேகரன் பேர் இல்லாம எவனாவது பத்து காசு எழுதுவானா? என்ன நடக்குதுன்னு பாரேன்" என ஆணவமாக பேசுகிறார் குணசேகரன். அதை கேட்டு விசாலாட்சி முகமே மாறி விடுகிறது.

குணசேகரனிடம் வந்த தாரா "எதுக்கு எங்களை ஒதுக்குறீங்க?" என கேட்க "எத்தனை தடவை காது குத்துவீங்க?" என அதட்டி கேட்கிறார் குணசேகரன்."எங்க முறையா குத்த விட்டீங்க?" என திருப்பி கேட்கிறாள் நந்தினி. "என்ன செய்றீங்கன்னு பார்ப்போம்" என சவால் விடுகிறார் குணசேகரன். அவர் பேசுவதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ. 

தலைப்பு செய்திகள்

ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
Embed widget