Ethirneechal September 10 : காதலை சொன்ன ஜனனி.. புதிய அவதாரம் எடுக்கும் நந்தினி.. கலகலப்பான எதிர்நீச்சல் எபிசோட்..
Ethir neechal September 10 episode :* நீ தான் சக்தி எனக்கு முக்கியம் என காதலை சொன்ன ஜனனி...* முதல் நாள் சமையல் ஆர்டர் டாஸ்கை வெற்றிகரமாக முடிப்பாளா நந்தினி? நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனி சக்தியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். சக்தியும் "நீதான் என்னுடைய வாழ்க்கை" என்கிறான்.
அடுத்த நாள் காலை நந்தினி முதியோர் இல்லத்திற்கு சமைக்கும் ஆர்டரை இன்று முதல் துவங்க போவதால் அனைத்தையும் சமைத்து மீனாட்சி அம்மனுக்கு படைத்து சாமி கும்பிட்டுவிட்டு ஈஸ்வரி மற்றும் நந்தினியிடம் மாறி மாறி டேஸ்ட் செய்ய சொல்கிறாள். அவர்கள் அனைவரும் மிகவும் அருமையாக இருக்கிறது என பாராட்டுகிறாள். இருப்பினும் நந்தினி பதற்றத்துடனே இருக்கிறாள்.
சக்தியிடம் ஜனனி சமைத்த உணவுகளை வெளியே கொண்டு வர சொல்கிறாள். "தெரிந்த வண்டி வேண்டாம் அதனால் வேற ஏதாவது வண்டியை புக் செய்கிறேன். வண்டி வந்ததும் நான் சொல்கிறேன்" என சொல்கிறாள் ஜனனி. நந்தினி கல்யாணம் முடிந்துவந்த புதிதில் கிண்டிய உப்புமாவை பற்றி சொல்லி கிண்டல் செய்கிறார்கள். அப்படி இருந்த நந்தினி இன்று ஸ்பெஷலிஸ்ட் நேன்டியாக மாறிவிட்டாள் என்பதை சொல்லி அவளை ஊக்கப்படுகிறார்கள்.
விசாலாட்சி அம்மாவிடம் சொல்ல சொல்லி ரேணுகா நந்தினியிடம் சொல்ல "வேண்டாம் முதல் நாள் நல்லபடியா போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம். அவங்க ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிடியாகவே இருக்குறாங்க. திடீர்ன்னு என்னோட பிள்ளைகளுக்கு தெரியாம உனக்கு என்னடி பிசினஸ் வேண்டி கிடக்குன்னு சொல்லிட்டாங்கன்னா?" என்கிறாள்.
அவர்கள் அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கும் அந்த சமயத்தில் கரிகாலன் சமயலறைக்கு வருகிறான். "என்ன மாநாடா?" என கேட்கிறான். அப்படியே சமைத்து வைத்த பாத்திரங்களை எல்லாம் பார்த்து விடுகிறான். "இது பரண் மேல இருந்து எடுத்த பாத்திரங்கள் போல இல்லையே. எனக்கு தெரியாம ஏதாவது திருட்டுத்தனம் பண்றீங்களா? இன்னைக்கு உன்னை பார்த்தாலே பக்தி பரவசமா இருக்கே" என நந்தினியை பார்த்து சந்தேகப்படுகிறான். ஆதிரை எங்கே என கேட்கிறான். ஆதிரை அவளுடைய தோழி ஒருத்தியைப் பார்க்க காலேஜ் சென்றுள்ளதாகவும் சீக்கிரம் வந்துவிடுவாள் எனச் சொல்லி எப்படியோ அவனை சமாளித்து வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.
ஜனனி புக் செய்த வண்டி வந்துவிடுகிறது. சக்திக்கு ஃபோன் செய்து வண்டி வந்துவிட்டது.. பாத்திரங்களை எல்லாம் வெளியில் கொண்டு வாங்க என சொல்கிறாள் ஜனனி. நந்தினி ஒரு முறை யாராவது ஹாலில் இருக்கிறார்களா என பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டு வெளியே வந்து பார்க்கிறாள். கரிகாலன் மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.