Ethir neechal July 6 Promo: சடங்கு சுத்த மறுக்கும் ரேணுகா... ஜான்சியை வெளியே துரத்தும் ஜனனி... எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்..!
இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் குணசேகரன் ரேணுகாவின் அம்மாவுக்கு போன் செய்து வரவழைத்து பேத்திக்கு சடங்கு சுற்றுவது குறித்து மக்களிடம் பேசி புரிய வைக்குமாறு கூறுகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில் நந்தினி வீட்டை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் அந்த வீட்டு ஆண்களை பசியில் துடிக்க வைக்கிறாள். கரிகாலன் பாவம் விருதுக்காக வந்து பசியில் சுருண்டு போய்விடுகிறான். ஜீவனாந்தத்தை நேரில் சந்தித்து அவருடைய அமைப்பில் சேர்வது குறித்து தன்னுடைய ஆர்வத்தை தெரிவிக்கிறான் கௌதம். அந்த நேரம் பார்த்து ஜீவானந்தத்திற்கு போன் வருகிறது.
பட்டம்மாள் ஷேர் விரைவில் ஜீவானந்தம் பெயரில் மாற உள்ளதாக தகவல் வருகிறது. ஜீவானந்தம் ஜனனி குறித்து கேட்டு விசாரித்து கொண்டு இருக்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. பட்டம்மாளின் 40% ஷேரை கைப்பற்றுவதில் குறியாக இருக்கும் குணசேகரன் அதை கோட்டை விட்டது பற்றி தெரியாமல் இருக்கிறார். ஜீவானந்தம், பட்டம்மாளின் கைரேகையை எடுத்தது பற்றி தெரியாமல் அவரின் வீட்டுக்கு மருமகள்கள் தான் அதற்கு காரணம் என நினைத்து கொண்டு இருக்கிறார். தற்போது ஜீவானந்தம் பெயருக்கு அந்த ஷேர் மாற போகிறது. இதற்கு பிறகு வரும் இந்த கதைக்களம் மேலும் சூடு பிடிக்க போகிறது.
இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் குணசேகரன் ரேணுகாவின் அம்மாவுக்கு போன் செய்து வரவழைத்து பேத்திக்கு சடங்கு சுற்றுவது குறித்து மக்களிடம் பேசி புரிய வைக்குமாறு கூறுகிறார். "யார் சொன்னாலும் என்னோட மகளுக்கு சடங்கு சுத்த மாட்டேன் " என அதிரடியாக கூறிவிடுகிறார் ரேணுகா.
மகன் கரிகாலனை மாப்பிள்ளை விருந்துக்கு அனுப்பி வைத்த ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளாள். அங்கே நடந்ததை பற்றி கேட்டறிந்து திமிராக பேசுகிறாள். நந்தினியிடம் சென்று "நீங்க இப்படி அடக்க ஒடுக்கமாக வந்த போதே எனக்கு தெரியும் நீங்க ஏதோ பிளான் போடுறீங்கன்னு" என கூற ஜனனி "அநாகரீகமாக பேசுறத நிப்பாட்டுங்க. முதல்ல வீட்டை விட்டு வெளிய போங்க' என கூறிவிடுகிறாள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.
ஜான்சி ராணி பிரச்சனை செய்வதற்காக தான் அங்கே வந்தது பற்றி அனைவருக்கும் தெரியும். ஜனனி வேற அவளை வெளியே போ என கூறிவிட்டாள் இனி என்ன பிரச்சனை செய்ய போகிறாள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
ஐஸ்வர்யாவின் விருப்பத்துக்காக சடங்கு சுத்த மறுக்கும் ரேணுகாவின் பிடிவாதம் செல்லுமா? ஆதிரையை வீட்டுக்கு அளித்து சென்று விடுவாளா ஜான்சி? ஜீவானந்தம் ஜனனி சந்திப்பு நடைபெறுமா? இந்த கேள்விக்கான பதில்கள் வரும் எபிசோடுகளில் தெரியவரும்.