மேலும் அறிய

Vanathai Pola: ஹீரோ முகத்தில் துப்பிய ஹீரோயின்.. வானத்தைப்போல சீரியலில் நடந்த உண்மை சம்பவம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் நடந்த உண்மை சம்பவம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக சினிமாவில் சண்டை காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நிஜமாகவே உயரத்தில் இருந்து குதிப்பவர்களும், ரிஸ்க் எடுத்து சண்டை போடுபவர்களும், ஆபத்தான பாதையில் வாகனம் இயக்கும் பிரபலங்களை பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால் சமீபகாலமாக சின்னத்திரை சீரியல்களில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கான காட்சிகள் இடம் பெறுகிறது. காதல் காட்சிகள் தொடங்கி சண்டை காட்சிகள் வரை இடம் பெறாமல் எந்த சீரியலும் இருப்பதில்லை. இப்படியான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல சீரியலில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதால் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல நிலையில் உள்ளது. வானத்தைப் போல சீரியலில் ஸ்ரீ, சாந்தினி, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடில் ஹீரோ ஸ்ரீ மீது இன்னொருவர் காரி உமிழ்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. கதைப்படி மகாநதி ஷங்கர் தான் அந்த காட்சியில் நடிக்க வேண்டும். ஆனால் தன்னால் சக நடிகர் மீது எச்சில் துப்பி நடிக்க முடியாது என மறுக்கவே, சீரியல் குழுவினர் சோப்புநுரையை பயன்படுத்தி காட்சியை எடுத்து விட முடிவு செய்தனர். 

ஆனால் இதனை ஹீரோ ஸ்ரீ ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜமாகவே எச்சில் துப்பும் காட்சி இருக்க வேண்டும். நான் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரே சக நடிகை சாந்தினியிடம் விஷயத்தை சொல்ல, முதலில் மறுத்த அவர், ஸ்ரீயின் விளக்கத்தால் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் திரையில் ஒளிபரப்பாகும் போது சக நடிகர் துப்பியது போன்று இடம் பெற்றிருந்தது.

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் ஸ்ரீ, ‘இதில் ஒன்றும் தப்பில்லை. சீரியலில் நான் நடிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது. நான் இந்த தொழிலில் காட்டும் உண்மையான அக்கறை தான் ஃபீல்டுல இருக்க காரணம் என நம்புறேன். காட்சிகள் யதார்த்தமா வரணும்ன்னா அதற்கேற்ற உழைப்பை கொடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!

Embed widget