மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: செம்ம ட்விஸ்ட்! மீண்டும் முன்னாள் போட்டியாளரின் மகளா? அனல் பறக்கும் வைல்ட் கார்டு என்ட்ரி!

அக்டோபர் 29-ஆம் தேதி 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமாக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

Bigg Boss 7 Tamil: அக்டோபர் 29ஆம் தேதி 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமாக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸ் தமிழ் 7:

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 25-வது நாளை எட்டியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.  மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.  முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை  தன் விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்ஸன், விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டவர்கள் நடுவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்படியான சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி நேற்று அறிவிக்கப்பட்டது.   அக்டோபர் 29-ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்டு முறையில் ஐந்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். 

வைல்டு கார்டு என்ட்ரி:

பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதில் இருந்தே சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இதுவரைக்கு இல்லாத வகையில் இந்த சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடக்கத்தில் இருந்தே அதிகமாக இருந்தது. இதற்கு காரணம், எந்த சீசனிலும் இல்லாத இரண்டு வீடு கான்செப்ட் என்று கூறி இருந்ததுதான். இரண்டு வீடு கான்செப்ட் இருந்ததால், இந்த சீசனில் அதிக போட்டியாளர்கள் இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கடைசியாக 18 போட்டியாளர்கள் மட்டும்தான் கலந்து கொண்டனர்.

அதிலும்,  மூன்று போட்டியாளர்கள் வெளியேறி, 15 பேர் தற்போது இருக்கின்றனர். இந்நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் வர இருக்கின்றனர். இதன் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது.  மேலும், வைல்டு கார்டு மூலம் உள்ளே  செல்பவர்கள், ஏற்கெனவே அங்கிருக்கும் போட்டியாளர்களின் குணங்கள் பற்றியும், பிக்பாஸ் வீட்டில் ஆடும் கேம் ஸ்ட்ராடிஜி பற்றியும் நன்கு தெரிந்துகொண்டு செல்வதால், நிகழ்ச்சியில் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

5 போட்டியாளர்கள் யார்?

இந்த ஐந்து போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் இணையதளத்தில் இந்த போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி கானா பாலா, மா.கா. பா ஆனந்த், வி.ஜே அர்ச்சனா, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமீதா மாரிமுத்துவின் மகளும் இந்த சீசனில் வைல்டு கார்ட் என்ட்ரியில் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்துகொண்டு, சிறிது நாட்களிலேயே உடல்நிலை சரியில்லை என்று கூறி வெளியேறிவிட்டார். அதிக நாட்கள் வீட்டில் இருக்கவில்லை என்றாலும், கொஞ்ச நாட்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில்தான் அவரது வளர்ப்பு மகள் பிரவீனா மாயா வைல்டு கார்ட் என்ட்ரியாக வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவின் மகள் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget