![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhagyalakshmi Serial: ஈஸ்வரியால் பாக்யா வீட்டில் வெடித்த மத பிரச்சினை ... ஷாக்கான ரசிகர்கள்...
Bhagyalakshmi Serial Written Update Today (16.12.2022): பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியால் மதம் தொடர்பாக ஆக்ரோஷமான உரையாடல்கள் நடக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
![Bhagyalakshmi Serial: ஈஸ்வரியால் பாக்யா வீட்டில் வெடித்த மத பிரச்சினை ... ஷாக்கான ரசிகர்கள்... bhagyalakshmi serial written update today 16th december 2022 episode 688 Eswari argument for jeni comment about religion Bhagyalakshmi Serial: ஈஸ்வரியால் பாக்யா வீட்டில் வெடித்த மத பிரச்சினை ... ஷாக்கான ரசிகர்கள்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/16/243462695dc77f44b8e0c0f5d50316291671163362948572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியால் மதம் தொடர்பாக ஆக்ரோஷமான உரையாடல்கள் நடக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
ட்விஸ்டுகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.
இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
சிக்கித்தவிக்கும் கோபி
ராமமூர்த்தியிடம் இனியா, தன்னை ராதிகா அடிக்க வந்த கதையை சொல்லிக்கொண்டிருக்கும் போது கோபி வருகிறார். அவரிடம் நாம எப்போ நம்ம வீட்டுக்கு போகப் போறோம் என இனியா கேட்க, அவர் அதிர்ச்சியடைகிறார். இதனைத் தொடர்ந்து ராதிகா அடிக்க வந்த விஷயத்தை சொல்ல, நான் ராதிகா கிட்ட பேசுறேன் என இனியாவை சமாளிக்கிறார். பின்னர் தனியாக ராதிகா, கோபி இருவரும் பேசுகின்றனர். அப்போது ஆரம்பத்தில் மயூவும் என்னை பிடிக்காமல் தான் இருந்தா..இப்ப ரொம்ப பிடிச்சிப் போச்சி...அதேமாதிரி தான் இனியாவும் என ராதிகாவிடம் எடுத்து சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து ராதிகா இனியாவிடம். ‘நீ போன் யூஸ் பண்ணிட்டு இருந்த அதனால தான் நான் அப்படி பண்ணேன். நான் உன்னை அடிக்கவேயில்லை. மன்னிச்சுக்க. இனிமேல் நீ என்ன பண்ணாலும் நான் கேட்க மாட்டேன் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே இனியா எழுந்து செல்கிறார். இதனால் ராதிகா மேலும் டென்ஷனாக கோபி பரிதவிக்கிறார்.
அட்வைஸ் சொன்ன ராமமூர்த்தி
தான் ராதிகாவை மன்னிப்பு கேட்க வைத்த விஷயத்தை ராமமூர்த்தியிடம் பெருமையாக இனியா சொல்ல, அவர் இதுதான் அம்மா உன்னை வளர்த்த முறையா? என கேள்வியெழுப்புகிறார். இதனால் அதிர்ச்சியாகும் இனியா, நீங்களும் நான் செஞ்சது தப்பு, அவங்க என்னை அடிக்க வந்தது தப்பு இல்லைன்னு சொல்றீங்களா என கேட்கிறார். உடனே ராதிகா பண்ணது தப்புன்னா, நீ பண்ணுனதும் தப்பு தான். ஒருத்தங்க பேசிட்டு இருக்கும் போது எந்திரிச்சி போனா என்ன அர்த்தம். வயசுக்கு மரியாதை கொடுக்கணும் என அட்வைஸ் பண்ணுகிறார்.
ஈஸ்வரி பேச்சால் அதிர்ச்சி
ஜெனி தன் அம்மாவிடம் போன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா அவங்க அம்மாவுக்கும் ஜெனி கூட இருக்கணும்ன்னு ஆசை இருக்கும்ல என தெரிவிக்க, அதான் இன்னும் 3 மாசத்துல போயிருவா என ஈஸ்வரி கூறுகிறார். அப்போது ஜெனி அம்மா குழந்தைக்கு ஞானஸ்தானம் எங்க கொடுக்கணும்ன்னு வரைக்கும் பிளான் பண்ணிட்டாங்க என தெரிவிக்க ஈஸ்வரி டென்ஷனாகிறார். அதெல்லாம் எதுக்கு? என் வீட்டுல அந்த குழந்தை திருநீறு பூசி மத்த குழந்தைங்க வளர்ந்த மாதிரி தான் வளரும் என பேசுகிறார். நிலைமையை சமாளிக்க பாக்யாவும், எழிலும் ஏதேதோ சொல்ல, ஈஸ்வரி தான் சொல்வது சரி என வாக்குவாதம் செய்யும் காட்சிகளோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)