மேலும் அறிய

Baakiyalakshmi Serial: இவ்வளவு நடந்தும் மீண்டும் ராதிகாவை சந்தித்த கோபி... என்னடா நடக்குது இங்க மொமெண்ட்..

மூர்த்தி தான் கூப்பிட்டும் பாக்யா வர மறுத்ததை தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டு கோபி, ஈஸ்வரி, செழியன், இனியா உட்பட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை மீண்டும் கோபி சந்திக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. நேற்றைய எபிசோடில் ராதிகா தனக்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வந்தபோது அவரை விட்டு விலகி விட்டேன் என மகள் மயூ மீது சத்தியம் செய்து கூறுவதைக் கண்டு அங்கிருந்து பாக்யா செல்வது போலவும், மாமனார் மூர்த்தி நேரில் வந்து கூப்பிட்டும் பாக்யா செல்ல மறுத்த காட்சிகளும் ஒளிபரப்பாகின. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

மூர்த்தி தான் கூப்பிட்டும் பாக்யா வர மறுத்ததை தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டு கோபி, ஈஸ்வரி, செழியன், இனியா உட்பட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். உங்கள் மகளுக்கும் இப்படி நடந்து விட்டால் இப்படி தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பீங்களா என தன்னிடம் கேட்டதாக மூர்த்தி தெரிவிக்கிறார். இதனையடுத்து ஈஸ்வரி கோபியிடம் இனி ராதிகாவுடன் எந்த தொடர்பும் வைக்ககூடாது என கூற அவரும் சரி என சம்மதிக்கிறார். 

தொடர்ந்து ராதிகாவை சந்திக்கும் கோபி கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறும், எல்லா பிரச்சனையும் சரியாகும்.மயூவை நான் நல்லா பாத்துக்குவேன் எனவும் தெரிவிக்கிறார். ஆனால் ராதிகாவோ பாக்யா தன்னை வந்து பார்த்த கதையை தெரிவிக்கிறார். மேலும் கோபி விடுத்த கோரிக்கை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ராதிகா அங்கிருந்து கிளம்புவது போல இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்ததாக பாக்யாவை சமாதானப்படுத்த கோபி அவரை நேரில் சந்திக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
மதுவிலக்கிற்காக யார் போராடினாலும் அதனை நான் வரவேற்கிறேன் - மருத்துவர் ராமதாஸ்
மதுவிலக்கிற்காக யார் போராடினாலும் அதனை நான் வரவேற்கிறேன் - மருத்துவர் ராமதாஸ்
"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல" - கொளத்தூர் மணி
அஷிரா சில்க்ஸின் அசத்தல் கலெக்ஷன்ஸ் அறிமுகம்.. ஷாப்பிங் போக தயாரா?
அஷிரா சில்க்ஸின் அசத்தல் கலெக்ஷன்ஸ் அறிமுகம்.. ஷாப்பிங் போக தயாரா?
Embed widget