Reshma: "நான் என்ன..? அதுனாலதான் படம் தொடர்ந்து நடிக்கல" மனம் திறந்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்
Bhagyalakshmi Reshma Interview: பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ரேஷ்மா படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டது ஏன்? என்று பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகையாக உலா வருபவர் ரேஷ்மா. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இவரை கொண்டு சேர்த்தது.
புஷ்பா கதாபாத்திரம்:
பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ரிலீசான பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக சின்னத்திரையிலும் பிரபலமானார். இவர் ABP நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது, புஷ்பா கதாபாத்திரத்திற்கு பிறகு அடுத்த லெவல் சென்றேனா? என்று தெரியவில்லை. அதேபோல, கதாபாத்திரம் தரத் தொடங்கினார்கள். அதன்பின்பு, படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டேன். நான் என்ன ரெக்கார்ட் டான்சரா? ரெக்கார்ட் டான்சரா நடிச்சேன். நம்ம துறையில் அதேமாதிரி ஆக்கிவிடுவார்கள் என்பதால் அவ்வாறு நடிப்பதை நிறுத்திவிட்டேன். அதன்பின்பு டிவிக்கு சென்றுவிட்டேன்.
ஈசி கிடையாது:
பிக்பாஸிற்கு முன்பும், பின்பும் என் கேரியர் ஒரே மாதிரிதான் உள்ளது. அதற்கு முன்பும் படங்கள், சீரியல் பண்ணேன். வெளியில் வந்த பிறகும் படங்கள், சீரியல் பண்ணுகிறேன். தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன். இப்போது தொலைக்காட்சியில் பரபரப்பாக உள்ளேன்.
இந்த வேலை ஈசி கிடையாது. நிறைய வெயிலில் நின்று நடிக்க வேண்டும். ஓட வேண்டும். நடிகர்கள் வேலை மிகவும் கடினமானது. பாக்கியலட்சுமி சீரியலில் அனைவருடனும் நெருக்கமாகவே இருக்கிறேன். இன்ஸ்டாகிராம் வீடியோ கருத்துக்களை கண்டுக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேஷ்மா முதன்முதலில் ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் தமிழில் வாணி ராணி தொடரில் நடித்தார். அதன்பின்பு, 2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் மூலமாக மிகவும் பிரபலமானார். திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்ள, பேய் மாமா, சூரகன், ராஜாகிளி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் எனிய தோழி,, உயிர்மெய், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, உயிரே, கண்ணான கண்ணே, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அபி டெய்லர், நீதான் என் பொன்வசந்தம், சீதா ராமன், பாண்டியன்ஸ்டோர்ஸ் 2, கார்த்திகை தீபம் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.





















