Baakiyalakshmi Serial: ‘பாக்யாவை மறக்காத கோபி’...வார்த்தையை விட்டு வசமாக மாட்டிய சம்பவம்.. இன்றைய எபிசோடு இதோ..!
நான் பாக்யா வந்தது, அப்பா சண்டை போட்டது, இவங்களால நீ மூட் அவுட் ஆனது என எதுவும் பிடிக்கல என தெரிவிக்கிறார். உடனே வேற எதுவும் இல்லல என கேட்க, “ஆமா பாக்யா” என கோபி சொல்ல உச்சக்கட்ட டென்ஷனாகிறார் ராதிகா.
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவுடனான கல்யாணம் நடப்பதற்கு முன் கோபி, பாக்யாவிடம் பேசும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.
கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாராகும் காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் ராமமூர்த்தி
மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வரும் ராமமூர்த்தியை பார்த்து ஏதோ பிரச்சனை என்று ஈஸ்வரி உணர்கிறார். ஆனால் கோபி கல்யாணம் பண்ணப்போறதை எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறார்.பின்னர் உள்ளே சென்று என்ன செய்ய என தவிக்கிறார். ஜெனியும் என்ன நடக்கிறது என புரியாமல் முழிக்கிறார்.
ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளும் கோபி
வெளியே பாக்யாவிடம் கோபி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து ராதிகா கோபத்தில் ரூமுக்குள் வருகிறார். பின்னர் கோபி உள்ளே வந்ததும் சந்துருவின் மனைவி அவரிடம் இதெல்லாம் நல்லவா இருக்கு. காலையில கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்படி சிரிச்சி சிரிச்சி பேசுறது சரியா படல என கோபியை கடிந்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார். உடனே ராதிகா எனக்கு எதுவுமே பிடிக்கல என சொல்ல, கோபியும் எனக்கு மட்டும் எல்லாம் பிடிச்சா நடக்குது என தெரிவிக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் ராதிகா, எதை சொல்றீங்க என கேட்க, நான் பாக்யா வந்தது, அப்பா சண்டை போட்டது, இவங்களால நீ மூட் அவுட் ஆனது என எதுவும் பிடிக்கல என தெரிவிக்கிறார். உடனே வேற எதுவும் இல்லல என கேட்க, “ஆமா பாக்யா” என கோபி சொல்ல உச்சக்கட்ட டென்ஷனாகிறார் ராதிகா. ஆனால் இவ்வளவு நேரம் அவகிட்ட பேசுன டென்ஷன்ல பேர் சொல்லிட்டேன் ராதிகா என சொல்லி சமாளிக்கிறார்.
ஈஸ்வரி - ராமமூர்த்தி பேச்சுவார்த்தை
தூங்காமல் கோபி செய்யப்போவதை எண்ணி தவிக்கும் ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி என்னாச்சு என விசாரிக்கிறார். தனக்கு எல்லாம் தெரியும் என சொல்லும் அவர், கோபி கல்யாணம் பண்ணப் போறதை நினைச்சுத்தானே வருத்தப்படுறீங்க. அதெல்லாம் அவன் நம்மல மீறி எதுவும் பண்ண மாட்டான். நீங்க எதையும் யோசிக்காதீங்க என ஆறுதல் சொல்கிறார்.
பாக்யாவிடம் நேரடியாக பேசும் ராதிகா
மண்டபத்தில் காலையில் காபி, டீ கொடுக்க செல்வி கோபி ரூமுக்குள் செல்கிறார். அங்கு அவரிடம் நீங்க செய்றது ஒன்னும் சரியில்ல. பாக்யா அக்காவை அழ வச்சிட்டு நீங்க கல்யாணம் பண்றது நல்லது இல்ல என வருத்தப்படுகிறார். கோபி, செல்வியிடம் உன்ன பிளான் போட்டு தானே இங்க அனுப்பிருக்கா..போய் குட்டையை குழப்பிட்டு வா என பாக்யா சொன்னாலோ என கேட்கிறார். அதற்கு செல்வி, அதெல்லாம் யாரும் அனுப்பல..அக்காவே அங்க யாருக்கோ கல்யாணம் மாதிரி சமைச்சிட்டு இருக்கு என சொல்ல கோபி குற்ற உணர்ச்சியில் நொந்து போகிறார்.
அப்போது எதேச்சையாக பாக்யா - ராதிகா சந்திக்கின்றனர். என்ன நிம்மதியை கெடுக்கத்தானே இங்க வந்துருக்கீங்க என ராதிகா கேட்க, எனக்கு அதெல்லாம் நேரம் இல்ல..மேலே எல்லாருக்கும் சாப்பாடு போடுற வேலை இருக்கு. நான் யாரோட வாழ்க்கையையும் தட்டி பறிச்சி பழக்கம் இல்ல என தெரிவிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.