Baakiyalakshmi serial: மகளுக்காக மனம் மாறும் பாக்கியா.. ஆனால் ஒரு கண்டிஷன்.. கோபிக்கு வந்தது செக்..
எழிலும், செல்வியும் பாக்யாவை மகள் இனியாவை வைத்து பிரச்சனையை முடிக்க குடும்பத்தினர் நினைப்பதாக பாக்யாவிடம் கூறுகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் மகள் இனியாவுக்காக பாக்யா மனம் மாறுவது போன்ற காட்சிகள் இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
மாமனார் மூர்த்தி நேரில் வந்து கூப்பிட்டும் வர மறுத்த நிலையில் மீண்டும் செழியனும், ஜெனியும் பாக்யாவை சமாதானப்படுத்த முடிவு செய்கின்றனர். அதற்குள் இனியா அம்மாவை நினைத்து அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்து மூர்த்தியும், செழியனும் செல்ல முடிவெடுத்து பாக்யாவை சந்திக்கின்றனர். மூர்த்தி, அவரிடம் செழியனும், எழிலும் வயதில் பெரியவர்கள். அதனால் நடந்த பிரச்சனை, நிலவும் சூழல் எல்லாம் அவர்களுக்கு புரியும். ஆனால் இனியாவுக்காக முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து அங்கிருந்து செல்கின்றனர்.
தொடர்ந்து எழிலும், வேலைக்காரி செல்வியும் பாக்யாவை மகள் இனியாவை வைத்து பிரச்சனையை முடிக்க குடும்பத்தினர் நினைப்பதாக பாக்யாவிடம் கூறுகின்றனர். மேலும் கோபி மனதார மன்னிப்பு கேட்டால் மட்டும் இனியாவுக்காக இறங்கி செல்லலாம் என தெரிவிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. அடுத்த எபிசோடில் பாக்யாவை சந்திக்க வரும் கோபியிடம் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்காது என சத்தியம் செய்ய சொல்லும் காட்சிகள் இடம் பெறும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கான எபிசோட் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்