Baakiyalakshmi Serial : முடிவுக்கு வந்த கோபியின் கதை.. பாக்யா ஆடிய ருத்ரதாண்டவம்.. அடுத்து இவங்களா?
எழிலும் ராஜேஷ் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்த பின் தான் யார் அந்த பெண் என்பதே தனக்கு தெரிய வந்ததாக சொல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட பாக்யா அவருக்கு ராதிகாவுடன் இருக்கும் தொடர்பை மொத்த குடும்பத்தினர் முன்னிலையில் தெரிவித்ததால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
மொத்தமா உடைஞ்சிடுச்சு.. 😱
— Vijay Television (@vijaytelevision) July 8, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/EQN4uzsM0n
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உண்மை பாக்யாவுக்கு தெரிந்தது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என பார்க்கலாம்.
கோபியிடம் பாக்யா, மூர்த்தி, எழில் ஆகிய மூவரும் ராதிகாவுடனான உறவு குறித்த உண்மையை சொல்லுமாறு தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பேசும் பாக்யா நீங்க என்னைக்காவது ஒருநாள் குடும்பத்துக்காக திரும்பி வந்துருவீங்க..நான் உங்க மேலே ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன்..மத்தவங்க உங்களை பேசுறப்ப நீங்க அப்படி எல்லாம் இல்லன்னு சொல்லிருக்கேன். ஆனால் ஹாஸ்பிட்டல்ல நேத்து தான் பார்த்த சம்பவத்துக்கு அப்பறம் எல்லாம் சுக்குநூறா உடைஞ்சிப் போச்சி என கூறுகிறார். அப்போதும் கோபி எதுவுமே நடக்காதது போல நான் யாரோட பேசுறேன் என கேட்க பாக்யா ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார்.
இதற்கிடையில் ராதிகாவின் கணவர் ராஜேஷ் தன்னை 3வது முறையாக சந்தித்து கோபியை ஒழுங்காக இருக்குமாறு எச்சரித்ததாகவும், ஆனால் இவன் திருந்தி விடுவான் என நினைத்து எதையும் வெளிக்காட்டாமல் இருந்ததாகவும் தந்தை மூர்த்தி கூறுகிறார். இதேபோல் எழிலும் ராஜேஷ் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்த பின் தான் யார் அந்த பெண் என்பதே தனக்கு தெரிய வந்ததாக சொல்கிறார்.
இதற்கிடையில் கோபி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நம்ப மறுக்கும் அவரது அம்மா ஈஸ்வரி கோபியை எல்லாவற்றுக்கும் என்ன பதில் கேட்க, கோபியோ அமைதியாக இருக்கிறார். உடனே ஈஸ்வரி பாக்யாவிடம் ஹாஸ்பிட்டலில் கோபியை யாரோட நீ பார்த்தாய் என கேட்கிறார். அதற்கு அவர் கோபியிடம் ‘இப்ப நீங்க சொல்றீங்களா...இல்லை நான் சொல்லட்டுமா’ என அவர் கொந்தளிக்கிறார். இறுதியாக கோபி நம்பர் கொடுத்து வர சொன்னது...அவர் மனைவின்னு ஹாஸ்பிட்டல்ல இருந்தது எல்லாமே ராதிகா தான் என கதையின் முடிச்சை ஒருவழியாக பாக்யா அவிழ்த்து விட்டார். இதனைக் கேட்டு மொத்த குடும்பமும் ஆடிப்போக இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
இனி அடுத்த வாரம் எபிசோடில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு கோபி உண்மையை ஒப்புக் கொள்வாரா? ..ஈஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்