Baakiyalakshmi Serial: வாழ்ந்தா உன்னோடு தான்..இல்லன்னா செத்துடுவேன்..ராதிகாவை மிரட்டும் கோபி
எனக்கு கொஞ்சம் டைம் வேணும். என்னால இப்போதைக்கு இவ்வளவுத் தான் சொல்ல முடியும் என ராதிகா சொல்ல கோபி அவரது கையை பிடித்து கெஞ்சுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுடன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கோபி வற்புறுத்தும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
ராதிகாவை மிரட்டும் கோபி
இப்ப என்னோட சேர்ந்து வாழ ஆசை இருக்கா இல்லையா என உண்மையை சொல்லு என கோபி கேட்க ராதிகா ஆமா என்கிறார். அப்பறம் எதுக்கு தயங்குற என கோபி கேட்க, ராதிகாவோ தான் காதலிச்சது, உங்களை கல்யாணம் பண்ணி ஹேப்பியா வாழணும்ன்னு நினைச்சது எல்லாம் உண்மை தான் என்னால மறுக்க முடியாது. எனக்கு உங்களை காதலிச்ச அந்த ராதிகாவைத் தான் பிடிக்கும். இப்ப உள்ள ராதிகாவை பிடிக்கல என தன்னுடைய நிலைப் பற்றி ராதிகா விளக்குகிறார். இப்படி எல்லாம் நடந்தப் பிறகு எனக்கு கொஞ்சம் டைம் வேணும். என்னால இப்போதைக்கு இவ்வளவுத் தான் சொல்ல முடியும் என ராதிகா சொல்ல கோபி அவரது கையை பிடித்து கெஞ்சுகிறார்.
அப்போது இனியா ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்ட வரும் பாக்யா, ஏற்கனவே கோபி பணத்தை கட்டியது தெரிந்ததும் அங்கிருந்து கிளம்புகிறார். அங்கிருந்து பைக்கில் செல்லும் போது இந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். ஆனால் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் செல்கிறார். யாரோ யார் கையை பிடிச்சதுக்கு நான் ஏன் கோபப்படணும் என நினைத்துக்கொண்டே வீட்டுக்கு செல்கிறார்.
அட இப்படி பண்ணா எப்படி மா.. 🤦♂️
— Vijay Television (@vijaytelevision) August 30, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/HCCFZ8qYY2
இறுதியாக கோபியிடம் இருந்து விடைபெறும் ராதிகாவிடம், உனக்காக இவ்வளவு இழந்தும், நடு ரோட்டுக்கு வந்தும் யோசிச்சி சொல்றேன்னு உன் முடிவை நீ சொல்லிட்ட..இப்ப நான் சொல்லுறேன். ஒரு பாதி வாழ்க்கையை வாழ்ந்துட்டேன். மீதி வாழ்க்கை இருக்கு. வாழ்ந்து அது உன்னோட தான். இல்லன்னா செத்துடுவேன். அப்படியே என் பொண்ணுக்காக வாழ்ந்தாலும் தனியா இருந்து செத்துப்போவேனே தவிர, மறுபடியும் அந்த குடும்பத்தோட சேர மாட்டேன் என கூறுகிறார். இதனால் டென்ஷனாகும் ராதிகா இப்படி எல்லாம் பேசாதீங்க. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க தான் கேக்குறேன். நம்பிக்கையோடு இருங்க..நல்லதே நடக்கும் என சொல்லி விட்டு செல்கிறார்.
செல்லும் வழியில் கோபியை நான் கல்யாணம் பண்ணிக்கணும் நினைச்சதே அவரோட மயூ சந்தோஷமா இருக்குறதால தான். இப்ப இவ்வளவு நடந்தும் மயூ கோபியிடம் ஹேப்பியா இருக்கா.. இப்ப நான் கோபியை கல்யாணம் பண்ணிக்கலாமா..இல்ல அப்படி நடந்தா ஏதாவது சொல்லுவாங்களா என தனக்குத்தானே ராதிகா கேட்டுக் கொள்கிறார்.
கோபியால் கடுப்பாகும் பாக்யா
வீட்டுக்குச் சென்ற பாக்யாவின் முகம் வாடி போயிருப்பதைக் கண்டு செல்வியும், ஜெனியும் என்னவென்று விசாரிக்கின்றனர். அப்போது பாக்யா கோபி ஃபீஸ் கட்டியதை சொல்கிறார். மேலும் ஜெனி பாக்யா கையில் வளையல் இல்லாததை கண்டு என்னவென்று கேட்க பாக்யா சமாளிக்கிறார். ஆனால் செல்வி வளையல் அடகு வைத்ததை சொல்கிறார். அப்போது பாக்யாவுக்கு கோபியிடம் இருந்து போன் வருகிறது. அதில் மிஸ் பாக்யலட்சுமி. நான் கோபிநாத் பேசுறேன். உங்க முன்னாள் கணவர் கோபிநாத் பேசுறேன். என்னம்மோ பெருசா சவால் விட்ட. எல்லாம் பாத்துப்பேன்னு..இப்ப என்னாச்சி.. என் பொண்ணு ஸ்கூல் ஃபீஸ் கட்டாம கடைசி நாள் வரைக்கும் இருந்துருக்க. என் பொண்ணு அவமானப்பட விடமாட்டேன். அங்க இருக்க எல்லாருக்கும் என்ன தேவைன்னு எனக்கு ஒரு தகவல் சொன்னா போதும். நான் செய்றேன். உனக்கு ஒன்னு சொல்லட்டா. நீ ஒரு ஒட்டுண்ணி. யாரோட துணையில்லாமையும் நீ வாழ முடியாது என சொல்ல ஆத்திரத்தில் போனை பாக்யா கட் பண்ணி விடுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.