மேலும் அறிய

Baakiyalakshmi Serial: கோபி மனைவி என மேடையேறிய பாக்யா...கடுப்பான ராதிகா..இன்றைய எபிசோட் இதோ..

ராதிகாவும்,பாக்யாவும் சந்திக்கும் நிலை வருகிறது. ராதிகா என்னை நிம்மதியாக இருக்கவே விட மாட்டிங்களா என கேட்டு பாக்யாவை கேள்வியெழுப்ப அங்கு வரும் மூர்த்தி டென்ஷனாகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் விருது வழங்கும் விழாவில் கோபியின் மனைவி என பாக்யா மேடை ஏறி பேசும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம்

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து, ராதிகாவுடனான திருமணம் என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இக்கதை சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் என காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

நொந்துபோன கோபி 

ஒரே போட்டில் கோபி, ராதிகாவுடன் சென்ற ராமமூர்த்தி, கண்ணன் இருவரையும் தொல்லை செய்து அங்கிருந்து ஓட வைக்கிறார். இதன்பின்னர் வீட்டில் ஜீவா-மீனா இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதை கெடுக்கும் விதமாக கண்ணன் வீடியோ கால் செய்கிறார். தொடர்ந்து கடைசியில் இருந்து போன் வர ஜீவா கிளம்பி செல்கிறார். 

இதனையடுத்து கொடைக்கானல் சென்றுள்ள 3 குடும்பங்களும் ஒரே இடத்தில் சுற்றிப் பார்க்கின்றனர். அப்போது வீடியோ கால் பேசும் இனியா படிக்கட்டில் இருந்து தவறி விழ போக கோபி காப்பாற்றுகிறார். அவரைக் கண்டு இனியா எரிச்சலடைய ஈஸ்வரி வந்து கண்டவங்க கிட்ட என்ன பேச்சு நீ போ என சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் கோபி என் பொண்ணுகிட்டயே கண்டவங்கன்னு ஏன் சொல்றீங்க என அம்மா ஈஸ்வரியிடம் கேட்கிறார். அதற்கு அவ முன்னாடி தானே கல்யாணம் பண்ண..என சொல்ல கோபி என்ன அம்மா என கேட்கிறார். நீ இனிமேல் அப்படி கூப்பிடாத. மண்டபத்துல பார்த்த அன்னிக்கே நீ என் பிள்ளை இல்லைன்னு நான் முடிவு பண்ணிட்டேன் என ஈஸ்வரி கோபியை திட்டுகிறார். தன் நிலையை எண்ணி கோபி நொந்து போகிறார். 

கவலைப்படாத பாக்யா 

அடுத்த காட்சியில் ராதிகாவும்,பாக்யாவும் சந்திக்கும் நிலை வருகிறது. ராதிகா என்னை நிம்மதியாக இருக்கவே விட மாட்டிங்களா என கேட்டு பாக்யாவை கேள்வியெழுப்ப அங்கு வரும் மூர்த்தி டென்ஷனாகிறார். ஆனால் பாக்யாவோ நான் நடிக்கவும் இல்லை. அதை நிரூபிக்கணும்ன்னு அவசியம் இல்ல. நான் வேண்டாம்ன்னு சொன்னவரை தான் நீங்க கல்யாணம் பண்ணிருக்கீங்க. அதனால எனக்கு எந்த பதட்டமும் இல்லை என கூறிவிட்டு செல்கிறார்.

ராதிகா அப்செட்டாக இருப்பதை பார்த்த கோபி போட்டிங் ஏரியாவில் நடந்தது தப்புதான் என சொல்லி சரண்டர் ஆகிறார். ராதிகா உங்க அப்பா ஏன் இப்படி இருக்காங்க என கேட்க, பார்த்தியா நல்ல குடும்பம் சொன்னீயே...எங்க அப்பா எப்படியெல்லாம் என்னை டார்ச்சர் பண்ணிருப்பாங்க என சொல்லி இதான் நேரம் என குடும்பத்தைப் பற்றி புகார் கூறுகிறார். மேலும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நிலையில் அது முடிந்ததும் மேலும் 2 நாட்கள் நாம் இங்கேயே இருக்கலாம் என கோபி சொல்கிறார்.

கடுப்பான ராதிகா 

இதன்பின்னர் அந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் ராதிகாவுடன் கோபி கலந்து கொள்ள, பாக்யா ராமமூர்த்தியுடன் பங்கேற்கிறார். விழாவை நடத்தும் கோபியின் நண்பன் கோபி மனைவி பாக்யாவை மேடைக்கு அழைக்கிறேன் என கூற ராதிகாவுக்கு கடுப்பாகிறது. மேடையேறும் பாக்யா கோபியை பெயரை சொல்லாமல் கடுமையாக விமர்சிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது, 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget