மேலும் அறிய

Baakiyalakshmi August 16 : அம்மா சொன்னதை கேட்டு ஷாக்கான கோபி.. பயமுறுத்திய பழனிச்சாமி... பாக்கியலட்சுமி எபிசோடில் இன்று  

*பழனிச்சாமியின் அம்மாவிடம் நியாயம் கேட்கச்சென்ற கோபிக்கு ஷாக் கொடுத்த பழனியின் அம்மா* இனியாவை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் கோபிஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு கோபி வருகிறார். பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசிக்கொண்டு வெளியே வருகிறார்கள். அப்போது கோபி பாக்கியாவை பார்த்து கேவலமாக பேசுகிறார். "நீ செய்யும் தில்லாலங்கடி வேலையை பார்க்கத்தான் வந்தேன். இப்போ தான் சந்தோஷமா இருக்கேன்னு சொல்ற, வீட்டில அப்படியே கண்ணகியாட்டம் பெரிய நடிப்பை காட்டுற" என மோசமாக பேசுகிறார் கோபி. 

பாக்கியாவை, பழனிச்சாமி கிளாஸ் உள்ளே அனுப்பிவிட்டு "எங்க அண்ணா போறீங்க. இங்க வாங்க அண்ணா.. பிள்ளைங்க படிக்கிற இடம் இங்க வந்து சண்டை போட்டா போலீசை கூப்பிடுவாங்க... மேடம் இவரு யாரு என்றே தெரியாது என சொல்லிடுவாங்க... நீங்க பேசுறது புடிக்காம போலீஸ் உங்களை கூட்டிட்டு போய் நல்ல கவனிப்பாங்க" என சொன்னதும், கோபி ”இருக்கட்டும் நான் பாத்துக்குறேன்” என சொல்லிவிட்டு கிளம்புகிறார். 

பாக்கியா, பழனிச்சாமியிடம் கோபி செய்வதை பார்த்து மனசு சங்கடப்பட்டு பேசுகிறாள். ”அவரோட வாழும்போது தான் என்னை சந்தோஷமா வாழ விடலை. இப்போதான் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என ஆகிவிட்டது. இப்பவும் ஏன் என்னை இப்படி தொந்தரவு செய்கிறார் என புரியவில்லை. அவர் இப்படி பண்ணும்போது தான் எனக்கு மேலே மேலே போகணும் என ஆசை வருகிறது” என சொல்கிறாள் பாக்கியா. 
 
கோபி நேரடியாக பழனிச்சாமியின் வீட்டுக்கு போய் பழனிச்சாமியின்  அம்மாவிடம் பேசுகிறார். நான் சொன்னதை பத்தி உங்க பையனை கண்டிச்சீங்களா என கேட்கிறார். "நான் ஏன் பழனியை கண்டிக்கணும். அவங்க இரண்டு பேரும் வயசுல பெரியவங்க. விஷயம் தெரிஞ்சவங்க. என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு தெரியாதா" என்கிறார் பழனியின் அம்மா. "நீ பேசிட்டு போனதுக்கு அப்புறம் தான் பழனிக்கும் பாக்கியாவும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என தோணுச்சு" என அம்மா சொன்னதும் கோபி ஷாக்காகிறார். 

உங்கக்கிட்ட போய் நியாயம் கேட்க வந்தேனே நானே என்னோட பிரச்னையை பார்த்துக்குறேன் என சொல்லி வெளியே செல்லும்போது, பழனிச்சாமி எதிரே வருகிறார். கோபியை விடாப்பிடியாக அழைத்து சென்று, ”சாப்பிடுங்க அண்ணா” என சொல்லி வகைவகையாக உணவை பரிமாறுகிறார். ”நான் ஏன் உன்னோட வீட்டில் சாப்பிடணும். எனக்கு உன்னை பார்த்தாலே பிடிக்காது” என கோபமாக சொல்லிவிட்டு வெளியே வந்து அப்பப்பா எவ்வளவு வெரைட்டியா சாப்பாடு என புலம்பி கொண்டே செல்கிறார் கோபி. 

காலேஜில் இனியா ப்ரெண்ட்ஸ்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறாள். அப்போது பாக்கியா வந்து அவர்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கிறாள். எழில் வரலையா என பாக்கியா கேட்க, ”இல்ல அப்பா வருவாரு” என இனியா சொல்ல அங்கே கோபி வந்து இனியாவை அழைத்து செல்கிறார்.

காரில் ஏறியதும் எதுக்குத்தான் பாக்கியாவுக்கு இந்த தேவையில்லாத வேலை? இப்படி கிடக்குற நேரத்தில் எல்லாம் ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்ததா எப்படி அவ குடும்பத்தையும் உன்னையும் கவனிச்சுக்குவா? என இனியாவை ஏத்தி விடுகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget