AndaKaKasam: ‛2 பைக்... 2 டிவி... போதுமா ஜீவா’ தூள் கிளப்பும் இந்த வாரம் ‛அண்டாகாகசம்’!
இந்த வாரம் இது வரையில் "அண்டாகாகசம்" நிகழ்ச்சி கண்டிராத திறமையான போட்டியாளர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி சுமார் 2,70,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வென்றுள்ளனர்
விஜய் டிவியின் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோ அனைத்துமே சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். விதவிதமான ஷோக்களை தயாரிப்பதில் திறமையானவர்கள் விஜய் டிவி புரோக்ராம் புரொடியுசர்கள். ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் விஜய் டிவியில் கொண்டாட்டம் தான். வழக்கமான சீரியல்கள் அல்லாமல் புதுமையான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புபவர்கள் விஜய் டிவி.
ரியாலிட்டி ஷோ ஸ்பெஷலிஸ்ட் விஜய் டிவி :
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு ராஜு வூட்ல பார்ட்டி, ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இப்படி அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் கட்டி போட்டு வைத்துள்ளது விஜய் டிவி. இவர்களை அடித்து கொள்ள எந்த ஒரு சேனலாலும் முடியாது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.
#MaKaPaAnand is all set to host a new game show titled #Andakakasam. While the anchor has hosted several game shows before, this one, he says, will be pretty different. https://t.co/M2AiaSkZPs
— Chennai Times (@ChennaiTimesTOI) August 12, 2022
புதுமையான கேம் ஷோ "அண்டாகாகசம்":
அந்த வகையில் சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் புதுமையான கேம் ஷோ "அண்டாகாகசம்". இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார் நம் அனைவரின் பிரியமான தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். ஒவ்வொரு வாரமும் இரண்டு அணிகளாக கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று செல்லும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சில வாரங்களிலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இது வரை யாரும் வென்றிடாத அதிக பரிசுகளை அள்ளிய தருணம் 🤩
— Vijay Television (@vijaytelevision) October 8, 2022
அண்டாகாகசம் - நாளை மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #AndaKaKasam #VijayTelevision pic.twitter.com/l6SgpmXLVP
பரிசுகளை அள்ளிச் சென்ற திறமையான போட்டியாளர்கள்:
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் நடிகர்கள் ஒரு அணியாகவும், தென்றல் வந்து என்னை தொடும் நடிகர்கள் மற்றுமொரு அணியாகவும் பங்கேற்கிறார்கள். இதுவரையில் பலர் இந்த கேம் ஷோவில் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால் ஒரு சில அணிகள் மட்டுமே பரிசு பொருட்களை வென்றுள்ளார். ஆனால் இந்த வாரம் இது வரையில் இந்த நிகழ்ச்சி கண்டிராத திறமையான போட்டியாளர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி சுமார் 2,70,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வென்றுள்ளனர். இந்த வாரம் மிகவும் ஸ்பெஷலான வாரமாக இருக்க போகிறது. அதனால் யாரும் இந்த நிகழ்ச்சியை இந்த வரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. காணத்தவறாதீர்கள்.