Amudhavum Annalakshmiyum : பறிபோகும் செந்திலின் வேலை... அமுதாவின் முடிவு என்ன? - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட் இதோ!
Amudhavum Annalakshmiyum : ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் ஒளிபரப்பாகிவருகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா.
திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இன்றைய எபிசோடில் காலையில் குளிக்க வரும் அமுதா தண்ணீர் குளிர்வதாக புவனாவிடம் சொல்லி உள்ளே செல்ல, செந்தில் கதவை தட்டி விட்டு வெந்நீரை வைத்து செல்கிறான். அமுதா குளித்து விட்டு வெளியே வந்தவள் புவனாவிற்கு நன்றி சொல்ல, புவனா தான் வெந்நீர் வைக்கவில்லை என சொல்கிறாள்.
அடுத்து அமுதா யோசனையுடன் பின்னால் வர, செந்தில் அடுப்பில் வெந்நீர் போட்டிருப்பது தெரிய வருகிறது. அடுத்து செந்தில் வேலைக்கு கிளம்ப, அன்னலட்சுமி அவனுக்கு டிபன் பாக்ஸ் ரெடி பண்ணாமல் இருக்க செந்திலே தனக்கான சாப்பாட்டை கட்டிக் கொண்டு கிளம்புகிறார். வடிவேலு அவனைப் பார்த்து நீ என்ன வாத்தியாரா டிப் டாப்பா டிரஸ் பண்ணிட்டு போற, பியூன் தானே? காக்கி யூனிபார்மை போட்டுகிட்டு போ என நக்கல் செய்கிறான்.
பின்னர் அமுதா பிள்ளையாரிடம் நீ வேணா என்னை கைவிட்டிருக்கலாம், ஆனா நான் அப்படி இல்லை உனக்கு நான் எப்பவும் செய்யுறதை செய்யுறேன், அப்ப தான் உனக்கு இவளை இப்படி கை விட்டுட்டோமேன்னு உறுத்தும் என பேசுகிறாள். பின்னர் செந்தில் பைக்கில் வரும் சத்தம் கேட்க, அமுதா பிள்ளையார் சிலையின் பின்னால் சென்று ஒளிந்து கொள்ள செந்தில் பிள்ளையாரிடம் தான் செய்ததது தவறு தான், எப்படியாவது என்னை அமுதாவுடன் சேர்த்து வைத்து விடு என மனமுருகி வேண்டுகிறான். பின்னால் இருந்து இதையெல்லாம் கேட்கும் அமுதா பெரிதாக உணர்ச்சி எதுவும் காட்டாமல் இருக்கிறாள்.
அடுத்து செந்தில் பள்ளிக்கு வந்து கரஸ்பாண்டெண்ட்டை பார்க்க, கரஸ் செந்திலை திட்டி அவனை வேலையை விட்டு அனுப்புகிறார். இதனால் அடுத்து நடக்கப்போவது என்ன? அமுதா செந்திலை ஏற்றுக் கொள்வாளா? என்பதை வரும் எபிசோட்களில் காணலாம்.