Amudhavum Annalakshmiyum Aug 25: குமரேசன் கொடுத்த ஷாக்...வீட்டை மீட்க அமுதா செய்த காரியம்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்று!
அமுதா புலம்பியபடி யாரிடம் பணம் கேட்பது என யோசித்தபடி நடந்து வந்து கொண்டிருக்க, வழியில் மாயா வந்து நிற்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’.
இந்த சீரியலில் அமுதா வீட்டை வாங்க பணம் கிடைக்காமல் தவிக்க, மாயா வேறொரு திட்டத்தை தீட்டிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அமுதா புலம்பியபடி யாரிடம் பணம் கேட்பது என யோசித்தபடி நடந்து வந்து கொண்டிருக்க, வழியில் மாயா வந்து நிற்கிறாள். மாயா அமுதாவிடம் “உங்களுக்கு பணம் கஷ்டம்னு அன்னைக்கு நீங்க பேசும் போது தெரிஞ்சுது.. என் பிரண்டு ஒருத்தர் இருக்காரு, நான் சொன்னா பணம் குடுப்பாரு” என சொல்கிறாள்.
இதைக் கேட்டு அமுதா, “உங்களுக்கு எதுக்குங்க கஷ்டம் நான் பார்த்துக்குறேன்” என நகர்ந்து செல்ல, மாயா மனதிற்குள் “பணத்துக்காக என் கிட்ட வந்து நிக்க வைக்குறனா இல்லையா பாரு, உங்க குடும்பத்துக்குள்ள கண்டிப்பா நான் காலடி எடுத்து வைப்பேன்” என எண்ணிக் கொள்கிறாள்.
அதைத் தொடர்ந்து அமுதா வீட்டிற்கு வந்து கதிரேசன் போட்டோவை பார்த்து கும்பிட்டுக் கொண்டிருக்க, குங்குமம் சிமிழ் கீழே விழுந்து கட்டிலுக்கு அடியில் போகிறது. கட்டில் அடியில் டிரங்க் பெட்டியில் தாத்தா பத்திரம் ஒன்று இருக்கிறது. அது 4 ஏக்கர் நிலம் இருப்பதற்கான பத்திரம் எனத் தெரிய வருகிறது.
உடனே வடிவேல் பழனியிடம் நிலத்தை வித்து பணத்தை ரெடி பண்ண போறாங்க என சொல்ல, பழனி “உனக்கு பத்து லட்சம் தருகிறேன், தடுத்து நிறுத்து” என சொல்ல, பழனி கையெழுத்து போடாம இருந்திடுறேன் என சொல்ல, உமா, “அப்படி சொன்னா நாங்க சொல்லித்தான் செய்யுறோம் எனத் தெரிந்துவிடும்” என சொல்கிறாள்.
அதனால் “உங்க தாத்தா ஒருத்தருக்கு மட்டும் எப்படி சொத்து எழுதி குடுக்க முடியும், உங்க அப்பாவும் ஒரு பையன் தான, நாமளும் ஒரு பத்திரத்தை ரெடி பண்ணி உங்க தாத்தா எழுதி வச்சதா சொல்லுவோம்” என பழனிக்கு ஐடியா சொல்கிறாள்.
இதையடுத்து பழனி போலின்னு கண்டுபிடிச்சிருவாங்களே என சொல்ல, உமா "கோர்ட்டு கேசுன்னு போனா சீக்கிரம் தீர்ப்பு வராது" என சொல்கிறாள். அமுதா, அன்னம், மாணிக்கம், செந்தில் நிலத்தை பார்க்க வருகிறாள்.
மாயாவும் அங்கு வந்து அதை பார்த்துக் கொண்டிருக்க, சேட்டு ஒருவர் வாங்கிக் கொள்வதாக சொல்ல, 20 லட்சம் அட்வான்ஸ் வேணும் என மாணிக்கம் கேட்க, சேட்டுவும் தருவதாக சொல்கிறார். குமரேசன் எனக்கும் எங்க அப்பா பங்கு இருக்குன்னு எழுதி வச்சிருக்காரு என டாக்குமெண்டை நீட்ட அனைவரும் ஷாக்காகின்றனர்.
இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.