அமீர் - பாவனி ஜோடிக்கு கிடைத்த வெற்றி... பிபி ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர்
BB Jodigal Season 2 Winner : பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதி சுற்று நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர் அமீர் - பாவனி ஜோடி.
![அமீர் - பாவனி ஜோடிக்கு கிடைத்த வெற்றி... பிபி ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர் Amir - Pavni wins the BB Jodigal season 2 title in Grand Finale அமீர் - பாவனி ஜோடிக்கு கிடைத்த வெற்றி... பிபி ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/05/202c7e2f45ccc84ebd6df716953b93611662378689199224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
BB Jodigal 2 Grand Finale Winners : பிபி ஜோடிகள் சீசன் 2 கிராண்ட் பைனல்ஸ் வின்னர்... அமீர் - பாவனி
விஜய் டிவியின் மோஸ்ட் வான்டட் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2. இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர் அமீர் - பாவனி ஜோடி.
பிபி ஜோடிகள் சீசன் 2 கிராண்ட் பைனல்ஸ் :
கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் வரவேற்பை தொடர்ந்த இந்த ஆண்டு பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை பிக் பாஸ் சீசன் 5யின் வெற்றியாளரான ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினார். இதில் ரியல் மற்றும் ரீல் ஜோடிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இருந்தனர். மிகவும் ஆரவாரமாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஜோடிகளாக வெளியேற நேற்று பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் நாகார்ஜூனா, ராஜமௌலி மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வாழ்த்துக்கள் #Amir & #Pavni 👏💐 #BBJodigal2 #GrandFinale #Winner #BBJ #VijayStars #VijayTelevision #VijayTV pic.twitter.com/znc2Lk6BlC
— Vijay Television (@vijaytelevision) September 5, 2022
அமீர்- பாவனி :
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 போட்டியின் டைட்டில் வின்னர் பட்டத்தை அமீர்- பாவனி தட்டி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் அமோகமான வரவேற்பு பெற்ற ஜோடிகள் அமீர் -பாவனி ஜோடி. இந்த நிகழ்ச்சியில் அமீரின் காதல் புரோபோசல் ஒரு ஹை லைட். அதற்கு பாவனி என்ன பதில் சொல்வர் என்பதயே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். இவர்களின் நடனம் நாளுக்கு நாள் அதிகரித்தது மற்றும் அவர்களின் திறமை ரசிகர்களையும் நடுவர்களையும் கவர்ந்தது. இந்த வெற்றிக்கு அவர்கள் நிச்சயம் தகுதியானவர்கள். செகண்ட் ரன்னர் அப் பட்டத்தை சிவா - சுஜா வருணி கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று பற்றியும் வெற்றியாளர்கள் பற்றின தகவல்களும் ஏற்கனவே கசிந்தாலும் நேற்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. பாவனி இந்த வெற்றி குறித்து சமூகவலைத்தளத்தில் தனது போஸ்ட் மூலம் அவரின் பார்ட்னர் அமீருக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)