Actress Sukanya: சித்தாராவை தொடர்ந்து மீண்டும் சீரியல் மூலம் எண்ட்ரீ கொடுக்கும் நடிகை சுகன்யா.. ரசிகர்கள் ஹேப்பி
சுகன்யாவுக்கு சன் டிவியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஆனந்தம் தொடர் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா மீண்டும் சின்னத்திரையில் சீரியல் மூலம் எண்ட்ரீ கொடுக்க இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுகன்யா. தொடர்ந்து விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இதன் பின்னர் சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன், கே.பாக்யராஜ் என அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர் அனைவருக்கும் ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய சுகன்யா ஆஹா, உன்னை கொடு என்னை தருவேன், ஸ்ரீ பண்ணாரி அம்மன், சில்லுனு ஒரு காதல், தொட்டால் பூ மலரும், ஆயுதம் செய்வோம், எல்லாம் அவன் செயல், அழகர் மலை, மொட்ட சிவா கெட்ட சிவா, திருமணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் சுகன்யா முன்னணி நாயகியாக வலம் வந்தார். மேலும் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் சுகன்யா பணியாற்றியுள்ளார்.
View this post on Instagram
அதேசமயம் என்னதான் சுகன்யா சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் சன் டிவியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஆனந்தம் தொடர் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி தொலைக்காட்சி ஒன்றிய விரைவில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சுகன்யா. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஹீரோயின் மற்றும் துணை கதாபாத்திரங்களின் நடித்து பிரபலமான நடிகை சித்தாரா சமீபத்தில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பூவா தலையா சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இப்படியாக 90 களின் காலகட்டத்தில் இருக்கும் பல ஹீரோயின்கள் சீரியல்களில் நடித்து வருவது ரசிகர்களுடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.