சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் ரெய்டு..! 40 இடங்களில் அதிரடி சோதனை!
சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்பு செழியன் தொடர்புடைய சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி அலுவலர்கள் 40க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார்.மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்பு செழியன் இல்லத்திலும் மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியக்கு சொந்தமான மதுரை காமராஜர் சாலையில் உள்ள அவரது இல்லம் , மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி இல்லம் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள கோபுரம் பைனான்ஸ் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
#BREAKING | பிரபல தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு!https://t.co/wupaoCQKa2 | #AnbuChezhiyan #kalaipulithanu #SRPrabhu #GnanavelRaja #itraid pic.twitter.com/VLTIh4DwSv
— ABP Nadu (@abpnadu) August 2, 2022
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரிலும் , சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பதை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை டி நகர் ராகவைய்யா சாலையில் உள்ள அன்புச் செழியன் வீடு மற்றும் கோபுரம் சினிமாஸ் அலுவலகத்திலும், சென்னை சூளைமேட்டில் 3 இடங்களிலும், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச் செழியன் தம்பி அழகர்சாமி வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்